fbpx
Homeபிற செய்திகள்எஸ்ஆர்எம் ஈஸ்வரி பொறியியல் கல்லூரியில் இந்தியாவின் முதல் ரோபோட்டிக்ஸ் மையம் துவக்கம்

எஸ்ஆர்எம் ஈஸ்வரி பொறியியல் கல்லூரியில் இந்தியாவின் முதல் ரோபோட்டிக்ஸ் மையம் துவக்கம்

எஸ்ஆர்எம் குழுமத்தின் ஒரு அங்கமான ஈஸ்வரி இன்ஜினியரிங் கல்லூரி வளா கத்தில், சுவிட்சர்லாந்தை தலை மையிடமாகக் கொண்ட ஏபிபி ரோபோட்டிக்ஸ் நிறுவனம் சார்பாக ‘குளோபல் எக்ஸலன்ஸ் சென்டர் ஃபார் ரோபோட்டிக்ஸ்’ தொடங் கப்பட்டுள்ளது. ரோபோட்டிக்ஸ் மற்றும் ஆட்டோமேஷன் துறையில் உலகளவில் முன்னணி வகிக்கும் ஏபிபி நிறுவனம், இந்தியாவில் அமைத்துள்ள முதல் மையம் இதுவே.

இந்த ஏபிபி ரோபோட்டிக்ஸ் – எஸ்ஆர்எம் ஈஸ்வரி குளோபல் எக்ஸலன்ஸ் மையத்தில் மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு (AI) ரோபோட்டிக் சிஸ்டம்கள் மற்றும் நுண்ணறிவுமிக்க தானியக்க ஆய்வகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சுயாதீன மொபைல் ரோபோக்கள், ஜெனரேட்டிவ் ஏ.ஐ, விஷன் சிஸ்டம்ஸ், ஐஓடி, பிஎல்சி ஆட்டோமேஷன், டிஜிட்டல் ட்வின் தொழில்நுட்பங்கள் மற்றும் ஸ்மார்ட் உற்பத்தி தீர்வுகள் போன்ற அதிநவீன தொழில்நுட்பங்களை ஒருங்கிணைத்ததாக இம்மையம் உருவாக்கப்பட்டுள்ளது.

எஸ்ஆர்எம் கல்வி குழுமத்தின் தலைவர் டாக்டர் ஆர். சிவக்குமார், மற்றும் துணைத் தலைவர் கீதா சிவக்குமார் ஆகியோர் முன்னிலை யில் இந்த மையத்தின் திறப்பு விழா நடைபெற்றது. ஏபிபி ரோபோட் டிக்ஸ் தலைவர் சுப்ரதா கர்மாகர், ஆதித்யராம் குழுமத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஆதித்யராம், அதானி ரியாலிட்டி நிறுவனத்தின் தலைமை இயக்க அதிகாரி அன்பு ஜெயபாலன், ஃப்ரோனியஸ் இந்தியா நிர்வாக இயக்குநர் விஸ்வநாத் காமத், எம்பெயுஆர் சிஸ்டம்ஸ்-ன் பொறியி யல் துறை தலைவர் பாஸ்கர் காஞ்சி, யுனிலீவர் (தெற்காசியா) பொது மேலாளர் ராம் பதௌரியா, அமால்கமேஷன்ஸ் குழுமத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி மீனாட்சி சுந்தரம், டிவிஎஸ் நெக்ஸ்ட்-ன் தலைமை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக் குநர் வினோத் கிருஷ்ணன், வீல்ஸ் இந்தியா நிர்வாக இயக்குநர் ஸ்ரீவத்ஸ் ராம் மற்றும் த்வனி குழும நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநர் சுஜாதா சக்கரவர்த்தி ஆகியோர் இணைந்து இந்த மையத்தை தொடங்கி வைத்தனர்.

இது குறித்து டாக்டர் சிவக்குமார் கூறுகையில், “மாணவர்கள் மற்றும் தொழில்துறை கூட்டாளர்களுக்காக இந்த குளோபல் எக்ஸலன்ஸ் மையத்தை நிறுவி தொடங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்“ என்றார். தொடர்ந்து சுப்ரதா கர்மகார், “ரோபோட்டிக்ஸ் மற்றும் தானியக்கமாக்கல் ஆகியவை உற்பத்தி துறையை புரட்சிகரமாக மாற்றி வருகின்றன” என்றார்.

படிக்க வேண்டும்

spot_img