fbpx
Homeபிற செய்திகள்சிறுகுறு, நடுத்தர தொழில்முனைவோருடன்பஞ்சாப் நேஷனல் வங்கி கலந்துரையாடல்- திட்டங்கள் குறித்து அலுவலர்கள் விளக்கம்

சிறுகுறு, நடுத்தர தொழில்முனைவோருடன்பஞ்சாப் நேஷனல் வங்கி கலந்துரையாடல்- திட்டங்கள் குறித்து அலுவலர்கள் விளக்கம்

பஞ்சாப் நேஷனல் வங்கியின் கோவை வட்ட அலுவலகம் சார்பில் சிறுகுறு மற்றும் நடுத்தர நிறுவன தொழில் முனைவோர் மெகா நேரடித் தொடர்பு திட்டம் -2026 (அவுட்ரீச்) நிகழ்ச்சி, ஆவராம்பாளையம் சாலையில் உள்ள கோஇண்டியா கூட்ட அரங்கில் இன்று காலை (ஏப்ரல் 27) நடைபெற்றது.


 இதனை வங்கியின் துணைப் பொதுமேலாளர் மற்றும் கோவை வட்டத் தலைவர் சஜித் ஹுசேன் தலைமை தாங்கி, குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.


 நிகழ்வில் கோவை மாவட்டத்தில் தற்போதைய தொழில் நிறுவனத்தினர் மற்றும் வாய்ப்புத் தேடும் தொழில் முனைவோர்கள் திரளாகப் பங்கேற்றனர்.

வாடிக்கையாளர்களுடன் அவர்களின் நிதி புரிதல்கள், தேவைகளை அறிந்து கொள்ளும்பொருட்டு வங்கி அலுவலர்கள் கலந்துரையாடினர்.

மேலும் சிறுகுறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கொன பஞ்சாப் நேஷனல் வங்கியால் வகுக்கப்பட்டுள்ள திட்டங்கள் குறித்தும் எடுத்துரைத்தனர்.  இந்நிகழ்வு மாவட்ட தொழில் முனைவோர்களிடையே உற்சாகமான வரவேற்பை பெற்றது.

படிக்க வேண்டும்

spot_img