கோவை பேரூர் அருகே ஹயாஷி-ஹா கராத்தே பெடரேஷன் ஆப் இந்தியா சார்பாக கோவை மேற்கு பகுதியில் கராத்தே பயிற்சிகள் பெற்று வரும் மாணவ மாணவியருக்கு பட்டய தேர்வு நடைபெற்றது.
கராத்தே பயிற்சி பெற்று வரும் 210 மாணவ மாணவியருக்கு பயிற்சிக்கு ஏற்ப கலர் பட்டயங்கள் மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டன.
இது குறித்து கியோஷி தொழில்நுட்ப இயக்குனர் மற்றும் தலைமை தேர்வாளர் வி.எம்.சி.மனோகரன் கூறுகையில், `ஆறு மாதத்திற்கு ஒருமுறை இந்த தேர்வு நடைபெறுவது வழக்கமாகும்.
இது போன்ற தேர்வுகள் நடைபெறுவதால் மாணவ மாணவிகள் தங்கள் திறமைக்கு ஏற்ப பட்டயங்களை வாங்குகின்றனர்.
மொத்தம் ஆறு வகையான கலர்கள் கொண்ட பட்டயங்கள் வழங்கப்படுகின்றன. இதில் முக்கியமானது கருப்பு பட்டயம்` என்றார்.
மேலும் அவர் பேசுகையில், சமீபத்தில் அரசு பள்ளி கல்வித்துறை சார்பாக நடைபெற்ற மாவட்ட, மாநில கராத்தே போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் எங்களது கராத்தே ஃபெடரேஷனில் உள்ளனர், என்றார்.



