fbpx
Homeபிற செய்திகள்உத்தங்குடி கண்மாயில் படகு குழாம் அமைக்க பொதுமக்கள் எதிர்பார்ப்பு

உத்தங்குடி கண்மாயில் படகு குழாம் அமைக்க பொதுமக்கள் எதிர்பார்ப்பு

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட உத்தங்குடி பகுதியில் உள்ள பழமையான கண்மாயைப் பராமரித்து, அங்கு படகு குழாம் அமைக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இக்கண்மாய் 100 ஆண்டுகளுக்கும் மேலான பழமை வாய்ந்தது. சுமார் 157 ஏக்கர் பரப்பளவைக் கொண்டது.

கடந்த சில ஆண்டுகளாகப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படாததால், கண்மாய் புதர் மண்டி காணப்படுகிறது. மேலும், கழிவுநீர் கலப்பதால் நீர் மாசடைந்து நிலத்தடி நீரும் பாதிக்கப்பட்டுள்ளது.

சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை 500 ஏக்கருக்கும் மேலான நிலங்களுக்கு இது நீர் ஆதாரமாக இருந்தது. ஆனால், நான்கு வழிச் சாலை விரிவாக்கம் மற்றும் நகரமயமாக்கல் காரணமாக விவசாய நிலங்கள் வீட்டுமனைகளாக மாறிவிட்டன. வண்டியூர் கண்மாயைப் போலவே, உத்தங்குடி கண்மாயையும் தூர்வாரி சீரமைக்க வேண்டும். இங்கு படகு குழாம் மற்றும் சிறுவர் பூங்கா அமைக்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

படிக்க வேண்டும்

spot_img