fbpx
Homeபிற செய்திகள்கோவையில் இருந்து சென்னைக்கு விமான பயணம் சென்ற ஆதரவற்ற குழந்தைகள்

கோவையில் இருந்து சென்னைக்கு விமான பயணம் சென்ற ஆதரவற்ற குழந்தைகள்

கோவையில் குழந்தைகளுக்கான நலத் திட்டமாக “Flight of Fantasy 5.0” என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. சமூக சேவை நோக்கில் நடத்தப்பட்ட இந்த முயற்சி, ஆதரவற்ற மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய குழந்தைகளுக்கு மறக்க முடியாத அனுபவத்தை அளிப்பதை நோக்கமாக கொண்டு, கோவையில் இருந்து சென்னைக்கு விமானத்தில் அழைத்து செல்லப்பட்டனர்.

“ஒவ்வொரு குழந்தைக்கும் மகிழ்ச்சி உரியது” என்ற கருப்பொருளில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை கோவை வடக்கு ரவுண்ட் டேபிள் மற்றும் லேடீஸ் சர்க்கிள் இணைந்து நடத்தியது. இது குழந்தைகளுக்கு விமானப் பயண அனுபவத்தை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த முயற்சி, பல சமூக அமைப் புகள் இணைந்து செயல்படுத்தும் ஒரு கூட்டு திட்டமாகும்.

இந்த நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக, கோவையில் இருந்து சென்னை வரை மற்றும் மீண்டும் கோவைக்கு குழந்தைகள் விமானத்தில் பயணம் செய்ய உள்ளனர். பல குழந்தைகளுக்கு இது முதல் விமான அனுபவமாக இருக்கும் என்பதால், இது அவர்களின் வாழ்க்கையில் மறக்க முடியாத தருணமாக அமையும் என ஒருங் கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

கோவை வடக்கு ரவுண்ட் டேபிள் 20 தலைவர் ராகுல் கிருஷ்ணகோபால்,லேடீஸ் சர்க்கிள் சேர் பெர்சன் நிகிதா ராகுல்,மெட்ராஸ் ரவுண்ட் டேபிள் 100 தலைவர் பிரவேஷ் ஜெயின், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் திபேந்தர் சிங்,மற்றும் ராஜேஷ் போஹ்ரா,கவுரவ் கபூர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img