கோவை கொங்குநாடு மருத்துவமனையில் தமிழ் புத்தாண்டு வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
இந்த புத்தாண்டு தினத்தில் தீ இல்லாமல் சமையல் என்ற தலைப்பில் சமையல் போட்டி வைக்கப்பட்டது.
கேஸ் இல்லாமல், அடுப்பு இல்லாமல், காலை உணவு, மதிய உணவு, இரவு உணவு தயாரிப்பது எப்படி என்று போட்டி வைக்கப்பட்டது.
மருத்துவமனையில் உள்ள பெண்களும் ஆண்களும் ஆர்வமாக பாரம்பரிய உடை அணிந்து கொண்டு போட்டியில் கலந்து கொண்டனர்.
விதவிதமான காலை உணவு, மதிய உணவு மற்றும் இரவு உணவு பச்சையாக தீங்கு இல்லாமல் தயாரித்தார்கள்.
கொங்குநாடு மருத்துவம னையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் பி ராஜு கூறுகையில், “இது அனைவருக்கும் உதவியாக இருக்கும்.
உடம்புக்கு நல்லது தீங்கு இல்லாதது. இவ்வாறு அனைவரும் சமையல் செய்து சாப்பிட்டால் நமது உடலில் நோயே இருக்காது. ஆயுட்காலம் அதிகமாகும்.
இந்த கேஸ்காக அலைய வேண்டியது இல்லை” என்றார். தொடர்ந்து டாக்டர் பி ராஜு, இப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தார்.



