fbpx
Homeபிற செய்திகள்கோவை ராயல்கேர் செவிலியர் கல்வி நிறுவனத்தில் மாநில அளவிலான கருத்தரங்கு

கோவை ராயல்கேர் செவிலியர் கல்வி நிறுவனத்தில் மாநில அளவிலான கருத்தரங்கு

ராயல்கேர் செவிலியர் கல்வி நிறுவனத்தில் மாநில அளவிலான கருத்தரங்கு நடைபெற்றது . நரம்பியல் செவிலியர் பயிற்சியில் உள்ள இடைவெளியை நிரப்புதல், அதிநவீன கண்டுபிடிப்புகள் மற்றும் சிகிச்சையில் சிறப்பு பற்றிய தலைப்புகளில் நடந்தது. நரம்பியல் செவிலியர் துறையில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த கருத்தரங்கு, நிபுணத்துவ மிக்கவர்களையும், துறை சார்ந்த பணியாளர்களையும் ஒருங்கிணைத்து, அறிவுசார் விபரங்களை பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பாக அமைந்தது.

கருத்தரங்கில், ராயல்கேர் செவிலியர் கல்வி நிறுவனத்தின் தாளாளர் டாக்டர் கீர்த்தனா சந்திரசேகர் வரவேற்றார் கருத்தரங்கு பற்றியும் அதன் நோக்கம், முக்கியத்துவம் குறித்து கல்வி நிறுவனத்தின் முதல்வர் பேராசிரியர் டாக்டர் பி.கவிதா விளக்கினார்.

ராயல்கேர் செவிலியர் கல்வி நிறுவனத்தின் நிர்வாக அறங்காவலர், ராயல்கேர் மருத்துவமனையின் தலை வர் டாக்டர் க. மாதேஸ்வரன் தலை மையுரையில், நரம்பியல் துறையில் செவிலியர் பயிற்சி சிறப்பாக அமைய வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து விளக்கினார்.

தலைமை விருந்தினராக சென்னை மருத்துவ கல்வி துறை இயக்குனர் மற்றும் செவிலியர் மருத்துவ கல்வி துறை இணை இயக்குனர் டாக்டர் எம்.நித்யானந்தம் பங்கேற்றார். நரம்பியல் செவிலியர் துறையின் நிபுணத்துவத்தையும், அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார்.

கருத்தரங்கில், நரம்பியல் செவி லியர் துறையில் ஏற்பட்டுள்ள நவீன மாற்றங்கள், ஆராய்ச்சிகள் மற்றும் பயிற்சிகள் குறித்த கருத்தரங்குகள் நடந்தன.

துறையில் நிபுணத்துவமிக்க வல்லுனர்கள், பணியாளர்கள், களப்பயிற்சியில் சிறப்பாக பணியாற்றுவோர் பங்கேற்று, தங்களது பல்வேறு தலைப்புகளில் பேசினர்.

பங்கேற்ற அனைவருக்கும் சிறப்பான அனுபவத்தை அளித்த கருத்தரங்கு, நன்றி நவிலல் உடன் இனிதாக நிறைவடைந்தது.

படிக்க வேண்டும்

spot_img