ஏப்ரல் 6-ம் தேதி வேட்புமனுத் தாக்கல் செய்ய உள்ளதாகவும், ஏப்ரல் 14-ம் தேதி முதல் வர் மு.க. ஸ்டாலின் தூத்துக்குடியில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாகவும் திமுக வேட்பாளர் கீதா ஜீவன் தெரிவித்தார்.
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள அமைச்சர் கீதா ஜீவன், முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் வாழ்த்துப் பெற்றுத் தூத்துக்குடி திரும்பினார். அவருக்கு எப்.சி.ஐ. குடோன் அருகே உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் செய்தியா ளர்களிடம் அவர் தெரிவித் ததாவது: தூத்துக்குடியில் சுற்றுச்சூழலைப் பாதிக்காத வகையில் புதிய தொழிற்சாலைகள் உருவாக்கப்படும். தூத்துக்குடி வ.உ.சி துறைமுக வளர்ச்சிக்கு மாநில அரசு மூலம் முக்கிய திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
இல்லத்தரசிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள ரூ.8,000 மதிப்பிலான கூப்பன் திட்டம் மூலம் வாஷிங் மெஷின் போன்ற அத்தியாவசியப் பொருட்களைப் பெண்கள் வாங்கிக்கொள்ளலாம். 35 லட்சம் மாணவர்களுக்கு மீண்டும் லேப்டாப் வழங்கப்படும்.
அடுத்த ஐந்தாண்டு களில் தமிழகம் முழுவதும் 10,000 புதிய பேருந்துகள் வாங்கப்படும்.
கடந்த ஐந்து ஆண்டுகளாக அதிமுகவினர் எங்கு சென்றார்கள் என்று தெரியவில்லை. இப்போது தேர்தல் வந்தவுடன் அறிக்கை விடுகிறார்கள். எதிர்க்கட்சியாக இருந்தபோது அவர்கள் தொகுதிக்கு எந்த வேலையும் செய்யவில்லை. ஆனால், நான் ஆளுங்கட்சியாக இருந்தாலும், எதிர்க் கட்சியாக இருந்தாலும் எப்போதும் மக்களோடு இருந்து வருகிறேன்.
தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் உள்ள மூன்று தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற்று, அந்த வெற்றியை முதல்வரின் காலடியில் சமர்ப்பிப்போம். தூத்துக்குடி தொகுதியில் இந்த முறை 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது உறுதி.
ஏப்ரல் 6-ம் தேதி வேட்புமனுத் தாக்கல் செய்ய உள்ளதாகவும், ஏப்ரல் 14-ம் தேதி முதல்வர் மு.க. ஸ்டாலின் தூத்துக்குடியில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாகவும் அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார்.
முன்னதாக, முத்துரா மலிங்க தேவர், அம்பேத்கர், பெரியார், காமராஜர் உள்ளிட்ட தலை வர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து அவர் மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்வில் மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர்.



