சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு நியூஸ்18 தொலைக்காட்சி சார்பில் தேர்தல் திருவிழா நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவையில் கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற என் வாக்கு என் உரிமை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள பிஷப் அப்பாசாமி கல்லூரியில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் கல்லூரி மாணவ மாணவிகள் 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி தேர்தல் விழிப்புணர்வு குறித்து முழக்கமிட்டவாறு பேரணி மேற்கொண்டனர். முன்னதாக தேர்தல் உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்த நிகழ்வில் மாணவர்கள் மத்தியில் பேசிய மாவட்ட ஆட்சியர், அனைவரும் தேர்தல் நாளன்று கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்றார். 18வயது நிரம்பியவர்கள் வாக்காளர் அடையாள அட்டைக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும், தேர்தல் குறித்தும் வாக்காளர்களின் விவரங்கள் குறித்தும் அனைத்தும் தேர்தல் ஆணையாளத்தால் வழங்கப்பட்டுள்ளது என்றும் Voters Helpline, Toll free எண் போன்ற வசதிகள் மூலம் கண்டறியலாம் என்றார்.
இந்த நிகழ்வில் கல்லூரி முதலவர் டாக்டர் .ஜெமிமா வின்ஸ்டன், பேராசிரியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.



