fbpx
Homeபிற செய்திகள்கோவையில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தயாரிப்பு ஆலோசனை கூட்டம் மரகதம் தங்கவேலு பங்கேற்றார்

கோவையில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தயாரிப்பு ஆலோசனை கூட்டம் மரகதம் தங்கவேலு பங்கேற்றார்

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி, தமிழ்நாடு காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குழு தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் நியமிக்கப்பட்டுள்ளார். இக்குழுவின் உறுப்பினரான மரகதம் தங்கவேலு கடந்த 19, 20ம் தேதிகளில் கோவையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றார்.

கோவை தெற்கு மாவட்டத்தில் நடந்த இந்த நிகழ்ச்சிக்கு தலைவர் சக்திவேல் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள், இளை ஞர் காங்கிரஸ் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பொது மக்களை சந்தித்து தமிழக மக்களுக்கு மிக முக்கியமாக தேவைப்படும் அம்சங்களை தேர்தல் அறிக்கையை சேர்ப்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.

இது தொடர்பாக மரகதம் தங்கவேலு கூறுகையில், மக்கள் தேவைகளை கேட்டறிந்து அதை ஷார்ட் லிஸ்ட் செய்து தலைவர் கார்த்தி சிதம்பரம் தலைமையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் வெளியிடப்பட உள்ளது. அதன் பிறகு தேர்தல் அறிக்கையின் சுருக்கத்தை ஒரு தபால் அட்டை அளவில் அச்சடித்து வெறும் ஐந்து கோரிக்கையை வருகின்ற சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு அரசிடம் கோரிக்கையாக வைத்து அதை நிறைவேற்ற வலியுறுத்துவோம்.
இந்த கோரிக்கைகளை ஒவ்வொன்றாக தலைவர் கார்த்திக் சிதம்பரம் அவர்கள் ஒவ்வொரு மாவட்டமாக வந்து வெளியிடப் போகிறார். இதில் முக்கியத்துவமாக கோவை மாவட்டத்தில் தேர்தல் அறிக் கையை வெளியிட உள்ளார்.
அதற்காக ஒவ்வொரு மாவட்டமாக சென்று ஆலோசனை பெற்று மற்றும் வாட்ஸ்அப் எண் 9500191333 மூலமும் ஆலோசனை பெறப்பட்டு வருகிறது. கட்சியினரும் பொதுமக்களும் தங்கள் கருத்துக்களை இதன் மூலமாகவும் பதிவு செய்து கொள்ளளாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

படிக்க வேண்டும்

spot_img