fbpx
Homeபிற செய்திகள்திருவண்ணாமலையில் தேர்தல் விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்த மாவட்ட ஆட்சியர்

திருவண்ணாமலையில் தேர்தல் விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்த மாவட்ட ஆட்சியர்

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 நடைபெறவுள்ளதை முன்னிட்டு, வாக்காளர்கள் அனைவரும் நேர்மையாகவும், முழுமையாகவும் வாக்களிக்க வேண்டும் என்பதைக் வலியுறுத்தி திருவண்ணாமலையில் தேர்தல் விழிப்புணர்வு பேரணி நேற்று நடைபெற்றது.

மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித்தலைவருமான க. தர்ப்பகராஜ், திருவண்ணாமலை மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் இந்த விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார். தேர்தலை முன்னிட்டு 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்யும் நோக்கில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, திருவண்ணாமலை மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து ஏற்பாடு செய்த இந்த பேரணியில் 300-க்கும் மேற்பட்ட மகளிர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். பேரணியை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சித்தலைவரும் இதில் பங்கேற்றார்.

“என் வாக்கு & என் உரிமை”, “100 சதவீதம் வாக்களிப்போம்”, “நேர்மையாக வாக்களிப்போம்” போன்ற வாசகங்கள் கொண்ட பதாகைகளை ஏந்திய மகளிர், மாநகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று பொதுமக்களிடம் தேர்தல் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

இந்நிகழ்வில் திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) தனபதி, மாநகராட்சி ஆணையர் செல்வபாலாஜி மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img