புனித ரம்ஜான் மாதம் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், கோவை மாவட்டம் சூலூரில் உள்ள மசூதியில் சிறப்பு நோன்பு திறப்பு (இப்தார்) நிகழ்ச்சி நடைபெற்றது. மத நல்லிணக்கத்தைப் போற்றும் வகையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், முன்னாள் சூலூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி. கந்தசாமி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அவருடன் சூலூர் நகரச் செயலாளர் கார்த்திகை வேலன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர்.
நிகழ்ச்சியின் போது, இஸ்லாமியப் பெருமக்களுடன் இணைந்து எம்.எல்.ஏ நோன்பு திறப்பு நிகழ்வில் பங்கேற்றார்.பின்னர் அனைவருக்கும் வழங்கப்பட்ட நோன்புக் கஞ்சியை அருந்தி, ரம்ஜான் வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டார். இதில் ஏராளமான பொதுமக்களும் இஸ்லாமியர்களும் கலந்து கொண்டனர்.



