சிதம்பரம் அருகே கீழமூங்கிலடியில் உள்ள ஸ்ரீ ராகவேந்திரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆண்டு விழா நடைபெற்றது.
இதற்கு கல்லூரி செயலாளர் டி.வி.கே.பாபு தலைமை தாங்கினார். நிறுவன தலைவர் டி.மணிமேகலை, கல்வி நிர்வாகி டாக்டர் பி.அசோக் குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
கல்லூரி முதல்வர் ஆர்.மாலதி ஆண்டறிக்கை வாசித்தார்.
தமிழகத்தின் நாட்டுப்புற மற்றும் கானா பாடகர் கானா பாலு, பாடகி ஹர்ஷினி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
விழாவில் கல்வி மற்றும் கல்வி சாரா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
இதில் கல்லூரி மாணவ-, மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
விழாவில் நிர்வாகக் குழு உறுப்பினர்கள், பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.



