fbpx
Homeபிற செய்திகள்சேலம் தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரியின் 68-ம் ஆண்டு விழா

சேலம் தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரியின் 68-ம் ஆண்டு விழா

தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரியின் 68-வது ஆண்டு விழா கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வள்ளியப்பா கலை அரங்கில் நடைபெற்றது.

இவ்விழாவில் பெங்களூருவைச் சேர்ந்த சி எம் என்விரோசிஸ்டம்ஸ் நிறுவனத்தின் நிறுவனர், தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர் வி.ஜேக்கப் கிராஸ்டா தலைமை விருந்தினராக கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார்.

கல்லூரியின் துணை முதல்வர் முனுசாமி வரவேற்புரை வழங்கினார்.

கல்லூரி முதல்வர் கனகராஜ் தனது ஆண்டு அறிக்கையில், தேசிய அளவில் உயர்தர கல்வி மற்றும் சிறந்த செயல்திறனுக்காக கல்லூரி பெற்ற தேசிய அளவிலான விருதுகள், மாநிலஅளவிலான என்எஸ்எஸ் விருதுகள் உள்ளிட்ட பல்வேறு சாதனைகளை எடுத்துரைத்தார். மேலும் 250-க்கும் மேற்பட்ட முன்னணி தொழில் நிறுவனங்களில் மாணவர்கள் வேலைவாய்ப்பு பெற்றிருப்பதையும், விளக்கமாக எடுத்துரைத்தார்.

விழாவில் தலைமை விருந்தினர் டாக்டர் வி.ஜேக்கப் கிராஸ்டா கல்லூரியின் சாதனைகளை பாராட்டினார். மேலும் மாணவர்கள் மாறி வரும் தொழில்நுட்பங்களை கற்றுக்கொண்டு தங்கள் துறைகளில் சாதிக்க பல்வேறு அறிவுரைகளை மாணவர்களுக்கு அவர் எடுத்துரைத்தார்.

கல்லூரியின் தலைவர் சொ.வள்ளியப்பா தனது தலைமை உரையில், மாணவர்கள் சவால்களை சாதனைகளாக மாற்றி உயர வேண்டும் என ஊக்கமளித்தார். கல்லூரியின் துணைத்தலைவர்கள் சொக்கு வள்ளியப்பா, தியாகு வள்ளியப்பா ஆகியோர், நவீன தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப மாணவர்கள் தங்களது கற்றல் திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், புதுமையான கண்டுபிடிப்புகளுடன் ஸ்டார்ட்அப் தொழில்களை துவங்க மாணவர்களுக்கு வழிகாட்டுதலும் நிதியுதவியும் வழங்கப்படுவதாக தெரிவித்தனர். கல்லூரி இயக்குனர் டாக்டர் வி. கார்த்திகேயன் சிறப்புரையாற்றினார்.

தொழில் நிறுவனங்களில் சிறந்து விளங்கும் இக்கல்லூரி முன்னாள் மாணவர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

கல்வியில் முன்னிலை பெற்ற மாணவ, மாணவியருக்கும், பல்வேறு போட்டிகளில் சிறப்பிடம் பிடித்தவர்களுக்கும் துறைவாரியாக பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

இவ்விழாவில் 2500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img