தமிழ்நாடு வீல் சேர் கிரிக்கெட் அசோசியேஷன் மற்றும் ஜேஎம்ஜே கிரிக்கெட் அகாடமி இணைந்து நடத்தும் தேசிய வீல் சேர் சாம்பியன்ஷிப் தென் மண்டல அளவிலான கிரிக்கெட் போட்டிகளின் துவக்க விழா தூத்துக்குடி மீளவிட்டானில் உள்ள என்.பெரியசாமி திடலில் நடைபெற்றது.
இந்த போட்டிகளை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான பெ.கீதாஜீவன் துவக்கி வைத்தார். விழாவுக்கு ஜேஎம்ஜே கிரிக்கெட் அகாடமி இயக்குநர் மருத் துவர் ஜீ.மகிழ் ஜீவன் தலை மை வகித்தார். முன்னதாக, தமிழ்நாடு வீல் சேர் கிரிக்கெட் சங்க தலைவர் துரை பாண்டியன் அனை வரையும் வரவேற்றார்.
போட்டிகளில் கோ வா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகிய அணிகளுக்காக மாற்றுத் திறனாளர் கிரிக்கெட் வீரர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். போட்டிகள் மார்ச் 12ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை நடை பெறுகிறது. இப்போட் டிகளுக்கு தூத்துக்குடி மாவட்ட கிரிக்கெட் சங்கத்தினர் நடுவர்களாக பங்கேற்றனர்.
இவ்விழாவில் காமராஜ் கல்லூரி பேராசிரியர் ஆனந்த், நவஜீவன் டிரான்ஸ் போர்ட் உரிமையாளர் கே.பெரியசாமி, திமுக இலக்கிய அணி அமைப் பாளர் ஜீவன் ஜேக்கப், ஜே.எம்.ஜே. கிரிக்கெட் அகாடமி நிர்வாகிகள், தமிழ்நாடு வீல் சேர் கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



