சுரானா அண்டு சுரானா சர்வதேச வழக்கறிஞர்கள் நிறுவனம் தனது புதிய கிளையை கோவையில் தொடங்கியுள்ளது.
கார்ப்பரேட், வணிகம் மற்றும் அறிவுசார் சொத்துரிமை ஆகிய துறைகளில் வல்லமை பெற்றுள்ள இந்நிறுவனம், இந்தியாவில் 60-க்கும் மேற்பட்ட நகரங்களிலும், உலகளவில் 40க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்குகிறது.
நிறுவனத்தின் மேனேஜிங் பார்ட்னர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் வினோத் சுரானா, 2017-இல் தமிழ்நாட்டில் நாட்டின் முதல் பாதுகாப்பு தொழில்துறை வழித்தடம் உருவாக்குவதற்கு மத்திய அரசுடன் கருத்தாக்கம் செய்து, தொடர்ந்து ஆதரித்து இவ்வழித்தடம் அமைவதற்கு பங்காற்றினார்.
முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக கோவை–திருப்பூர் பகுதிகளில் உள்ள பல தொழில் நிறுவனங்களுக்கும் தொழில் குடும்பங்களுக்கும் சென்னை அலுவ லகத்திலிருந்து சட்ட சேவைகளை வழங்கி வந்த இந்த அமைப்பு, தற்போது கோவையில் நேரடியாக கிளையைத் தொடங்கியுள்ளது.
கோவை கொடிசியா அமைப்புடன் சர்வதேச வழக்கறிஞர்கள் அமைப்பு தனது புரிந்துணர்வு ஒப்பந்தத்தை கையெழுத்திட்டுள்ளது. இந்த நிகழ்வை முன்னிட்டு அறிவுசார் சொத்துரிமை, சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் தொழில் குடும்பங்கள் தொடர்பான மூன்று கையேடுகளை அமைப்பு வெளியிட்டது.



