fbpx
Homeபிற செய்திகள்கேஸ் தட்டுப்பாடு: புகையில்லா அடுப்பை நோக்கி மக்கள் பயணம்

கேஸ் தட்டுப்பாடு: புகையில்லா அடுப்பை நோக்கி மக்கள் பயணம்

அமெரிக்கா-ஈரான் போரினால் சமையல் கேஸ் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதனால் பலர் புகையில்லா அடுப்பு வாங்க முன் வருகின்றனர்.
கேஸ் தட்டுப்பாடு என்ற பிரச்சினை ஏற்பட்டவுடன் புகையில்லா அடுப்பு தயாரிக்கும் நிறுவனங்கள் சமூக வலைத் தளங்களில் தங்கள் பொருட்களை பற்றி தகவலை வெளியிடுகின்றன. சிறு சிறு கட்டைகளை எரிபொருளாக மின் சார உதவியுடன் பயன்படுத்தலாம். அதிலிருந்து புகை வெளிவராது.

பொதுவாக சென்னை தவிர மற்ற மாவட்டங்களில் விறகுகள் ஏராளமாக கிடைக்கின்றன. எனவே மக்கள் அதை பயன்படுத்த முடியும். புகை ஏற்படாது என்பதால்அடுக்குமாடி குடியிருப்பு களிலும் சிறிய வீடுகள் ஹோட்டல்கள் மற்றும் கல்லூரி பள்ளி விடுதிகளில் அதை பயன்படுத்தலாம். தற்போது எலக்ட்ரிக் அடுப்புகளை பயன்படுத்தவும் பலர் யோசித்து வருகின்றனர்.

ஆனால் எலக்ட்ரிக் அடுப்பினால் மின்கட்டணம் அதிகம் செலுத்த வேண்டி வரும் என்பதால் இந்த புகை யில்லா அடுப்பை பயன்படுத்த பலர் திட்டமிடுகின்றனர். எனவே இதற்கான தேவை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. அரசு கேஸ் தட்டுப்பாடு இல்லை அச்சப்பட வேண்டாம் என்று உறுதி அளித்தாலும் கேஸ் விநியோக நிறு வனங்கள் நுகர்வோரின் போன் கால்களை எடுப்பதில்லை. எனவே இதுவும் மக்கள் மத்தியில் அடுத்த பல மாதங்களுக்கு கேஸ் பிரச்சினை, பெட் ரோல் டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டு தொழிற்சாலைகளை வாகனங்களை இயக்க முடியுமா என்றெல்லாம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த போர் தொடர்ந்தால் பல பொருள்களின் விலைகள் உயரக்கூடும். உதாரணத்திற்கு மின்சாரம் போதுமான அளவு கிடைக்காத சமயங்களில் ஜென ரேட்டர்களை பயன்படுத்தி சுத்திகரிக்கும் குடிநீர் தயாரிக்கும் நிறுவனங்கள் செயல்படுகின்றன. இந்த ஜெனரேட்டர்கள் டீசல் மூலம் இயக்கப்படுகின்றன. டீசல் கிடைக்காத பட்சத்தில் உற்பத்தி பாதிக்கப் படும். இதேபோன்று பல்வேறு பொருட் களுக்கு நாம் வெளி நாடுகளை நம்பி உள்ளோம். விவசாயிகளுக்கு தேவை யான உரம் தயாரிக்க வேண்டிய மூலப் பொருள்கள் மற்றும் உரம் இறக்குமதி செய்யப்படுகிறது. அவைகள் வருவது நின்று போனால் விவசாயமும் பாதிக்கும் நிலை உருவாகும். எனவே இந்த போர் விரைவில் முடிவுக்கு வரவேண்டும் என்று பலர் விரும்புகின்றனர்.

சீனா இந்த போரை எதிர்பார்த்து ஏற்கனவே ஆறு மாதத்திற்கு தேவையான கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து வைத்துள்ளது. நமது நாட்டின் தேவையை 35% மட்டும் பூர்த்தி செய்ய முடியும். பெரும்பாலும் ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வந்தோம். தற்போது அதுவும் பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்திய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை. மக்களுக்கும் இது குறித்து தெளிவான விளக்கத்தை இதுவரை தரவில்லை.
ஐந்து மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ள சூழலில் மத்திய அரசு, அதைச் சார்ந்த கட்சிகள் இப்பிரச்சினையில் கடுமையாக விமர்சிக்கப்படும். தேர்தல் நெருங்கியுள்ளதால் பெட்ரோல் டீசல் கேஸ் தட்டுப்பாடு தேர்தலில் பிரதிபலிக்கும்.

படிக்க வேண்டும்

spot_img