fbpx
Homeபிற செய்திகள்ரோல் பால் விளையாட்டு போட்டியில் வென்ற கோவை அணிக்கு கோப்பை

ரோல் பால் விளையாட்டு போட்டியில் வென்ற கோவை அணிக்கு கோப்பை

ரோல் பால் விளையாட்டு போட்டியில் கோவையை சேர்ந்த பெண்கள் அணிக்கு ஐஜி பாலகிருஷ்ணன் கோப்பை வழங்கினார்.

15வது மினி தேசிய ரோல்பால் போட்டி கடந்த 3 நாட்களாக திருச் சியில் நடந்தது. இதில் 20 மாநிலங்களை சேர்ந்த 11 வயதிற்கு உட்பட்ட ஆண்கள், பெண்கள் அணிகள் கலந்து கொண்டு விளையாடினர். இப் போட்டிகள் ‘லீக்’ மற்றும் நாக்-அவுட் முறையில் நடந்தன. பெண்கள் பிரிவில் நடந்த இறுதி போட்டியில் தமிழக அணி, ஒடிசாவை எதிர் கொண்டு விளையாடியது. இதில் தமிழக அணி 2&-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது.

அதைத்தொடர்ந்து மத்திய மண்டல ஐ.ஜி.பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பை மற்றும் பதக்கங்களை வழங்கினார்.

படிக்க வேண்டும்

spot_img