fbpx
Homeபிற செய்திகள்சசிகலாவின் புதிய கட்சிக் கொடியேற்று விழா

சசிகலாவின் புதிய கட்சிக் கொடியேற்று விழா

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அரசியல் களம் புதிய திருப்பங்களைச் சந்தித்து வருகிறது. சமீபத்தில் ராமநாதபுரம் கமுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தனது புதிய கட்சிக் கொடியை வீ.கே சசிகலா அறிமுகப்படுத்தினார்.

சிவப்பு, வெள்ளை மற்றும் கருப்பு வண்ணங்களுடன் அண்ணா,எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் உருவப்படங்கள் பொறிக்கப்பட்ட கட்சியின் கொடி தற்போது மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஏற்றப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட சோமனூர் பகுதியில் வீ.கே சசிகலா ஆதரவாளர்கள் மாநிலத்திலேயே முதன் முறையாக இந்தக் கொடியை ஏற்றினர்.

சோமனூர் ரயில்வே மேம்பாலம் அருகே திரண்ட தொண்டர்கள், புதிய கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் கட்சியின் நிர்வாகி எஸ்விஎல் வெங்கடாசலம், மகளிர் அணி பூங்கொடி, அருள் குமார், திருப்பூர் மாவட்டம் வெங்கடேசன், செந்தில், சண்முகம், ரவி, ஜெகன், பிரபாகர் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img