fbpx
Homeபிற செய்திகள்தோடர் பழங்குடியினருக்கு கோவை பி.எஸ்.ஜி மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனை

தோடர் பழங்குடியினருக்கு கோவை பி.எஸ்.ஜி மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனை

தோடர்கள் தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் ஒரு தனித்துவமான பழங்குடியின மக்கள் ஆவர். அவர்கள் கோவை பி.எஸ்.ஜி சூப்பர் ஸ்பெசாலிட்டி ஹாஸ்பிடலை தொடர்பு கொண்டு சிகிச்சை அளிக்க கேட்டுக்கொண்டுள்ளனர்.

இது குறித்து இயக்குனர் ஜே.எஸ் புவனேஸ்வரன் கூறியதா வது: தோடர்கள் தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் (ஊட்டி) வசிக்கும் ஒரு தனித்துவமான மற்றும் பழமையான பழங்குடியின மக்கள் ஆவர். அவர்களிடமிருந்து எனக்கு ஒரு வித்தியாசமான அழைப்பு வந்தது.

அதாவது அவர்களுக்கு எங்கள் பி.எஸ்.ஜி மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனை செய்து கொடுக்க முடியுமா என்று என்னிடம் கேட்டார்கள்.

அவர்கள் என்னிடம், முப்பதுக்கும் மேற்பட்ட ஒரு குழுவாக வந்தபொழுது, அவர்களிடம் உரையாடுவதற்கு எனக்கு வாய்ப்பு கிடைத்தது. பொதுவா பார்த்தீங்கன்னா, இந்த மாதிரி மலைவாழ் மக்கள் அப்படிங்கும்போது, அவர்களுக்கு என்று சில தனிப்பட்ட உடல் நலப்பிரச்சனைகள் இருக்கும்.

அவர்களுடைய ரத்த ஓட்டமும் கொஞ்சம் ஸ்லோவா இருக்கும் முக்கியமாக ரத்தத்தில் சில வித்தியாசமான ரத்த குறைபாடுகளை உதாரணமாக தலசீமியா மற்றும் சிக்கல்செல் அனிமியா மற்றும் கலாச்சார மாற்றங்களினால் அவர்களுக்கு ரத்த கொதிப்பு மற்றும் சர்க்கரை குறைபாடுகளும்கூட ஏற்படுகிறது.

அவர்களின் வாழ்க்கை முறை மாற்றங்களினாலும் இது மாதிரி சில பிரச்சினைகள் வருவதையும் நாங்கள் பார்க்கிறோம். அவர்கள் அனைவருக்கும் அவர்கள் கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் பதில் கொடுத்து, சிறப்பாக முழு உடல் பரிசோதனையை செய்தோம். அவர்கள் அனைவரும் பொதுவாக ஆரோக்கியமாக இருக்கிறார்கள்.

இதுல மனசுக்கு இதமான விஷயம் என்னன்னா, இந்த முழு உடல் பரிசோதனையை செய்ய வேண்டும் என்று எங்கள் பி.எஸ்.ஜி மருத்துவமனையின் மீது நம்பிக்கை வைத்து இவ்வளவு தூரம் வந்து அந்த முழு உடல் பரிசோதனையை செய்து கொள்கிறார்கள். எங்கள் பி.எஸ்.ஜி மருத்துவமனை குழுவிற்கும் அவர்களை அழைத்து வந்த குழு தலைவருக்கும் மிக்க நன்றி. இவ்வாறு அவர் கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img