கோவை குமரகுரு கல்வி நிறுவனங்களில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள ‘குமரகுரு பொது மற்றும் போட்டித் தேர்வுகளுக்கான மையத்தின் தொடக்க விழா நடைபெற்றது.
இதில் சென்னை துறைமுக பொறுப்புக் கழகத் தலைவர் விஸ்வநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசுகையில், “குமரகுரு கல்வி நிறுவனம் இத்தகைய மையத்தைத் தொடங்கியிருப்பது மாணவர்களின் பல ஆண்டு கால அலைச்சலையும், நேரத்தையும் மிச்சப்படுத்தும்“ என்று கூறினார்.
குமரகுரு கல்வி நிறுவனங்களின் தலைவர் ஸ்ரீ சங்கர் வானவராயர் பேசுகையில், “இந்த மையம் இந்தியாவின் அடுத்த 25 ஆண்டுகால வளர்ச்சியை வழிநடத்தும் தலைவர்களை உருவாக்கும்“ என்றார்.
இது முன்னேற்றம், நிபுணத்துவ வழிகாட்டல், தொடர் ஆலோசனை மற்றும் நிறுவன அர்ப்பணிப்பு ஆகிய நான்கு தூண்களின் அடிப்படையில் செயல்படும் என்று மையத்தின் தலைவர் பினுகிருஷ்ணா தெரிவித்தார்.
மேலும், சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமி, அறம் ஐ.ஏ.எஸ் அகாடமி, சென்னை டிபென்ஸ் அகாடமி, வெரண்டா ரேஸ் மற்றும் லேர்ன்ஸ்கொயர் டெக்னாலஜிஸ் ஆகிய முன்னணி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.



