மகா சிவராத்திரியை முன்னிட்டு பிரஜாபிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம் சார்பில் ஈரோடு வீரப்பன் சத்திரம் பகுதியில் இருந்து மாமரத்துப்பாளையம் ராஜயோக தியான நிலையம் வரை ஆன்மீக ஊர்வலம் ஏற்பாடு செய்தது. ஊர்வலத்தை மொடக்குறிச்சி எம்எல்ஏ டாக்டர் சரஸ்வதி கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
பின்னர் தியான நிலையில் சிறப்பு பூஜைகள் ஆன்மீக சொற்பொழிவு நடைபெற்றது. நிகழ்ச்சிகளை வித்யாலயம் நிர் வாகிகள் ரவி மற்றும் சகிதா செய்திருந்தனர். வழக்கறி ஞர்கள் திருஞானசம்பந்தம் சிவசுப்பிரமணியம் பெரிய மாரியம்மன் கோவில் நில மீட்பு இயக்க த்தலைவர் ஈ.ஆர்.எம்.சந்திரசேகர் உட் பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.



