கூட்டு கல்வி மற்றும் தொழில்முறை முயற்சிகள் மூலம் கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழில்துறையி னருக்கு இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்து வதற்காக கோவை மேலாண்மை கழகத்துடன் கோவை அம்ருதா விஸ்வ வித்யாபீடம் புரிந்து ணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
இந்தக் கூட்டாண்மை மாணவர்களின் செயல்திட்டங்கள், பயிற்சிகள் மற்றும் தொழிற்சாலைப் பய ணங்களுக்கு வழிவகுக்கும். மேலும் இது பயிலரங்குகள், கருத்தரங்குகள் மற்றும் மேலாண்மை நிகழ்வுகளையும் உள்ளடக் கியது. அத்துடன், ஆசிரிய மேம்பாட்டுத் திட்டங்கள், நிர்வாக மற்றும் மேலாண்மை மேம்பாட்டுத்திட்டங்கள், ஆலோசனைப் பணிகள், பாடத்திட்ட ஆதரவு, சிறப்பு விரிவுரைகள் மற்றும் ‘புரொபசர் ஆஃப் பிராக் டிஸ்’ ஆகியவற்றுக் கும் இது வழிவகை செய்கிறது.
இந்தக் கூட்டாண்மை மாணவர்களுக்குத் தொழில் துறை சார்ந்த அனுபவத்தையும் நடைமுறை கற்றல் வாய்ப்புகளையும் மேம்படுத்தும் என்றும், அதே வேளையில் ஆசிரியர்க ளுக்கும் மேலாண்மைத் துறை நிபுணர்களுக்கும் இடையே நெருக்கமான உரையாடல்களை ஏற்படுத்தும் என்றும் எதிர் பார்க்கப்படுகிறது.

அம்ருதா ஸ்கூல் ஆஃப் பிசினஸ் டீன் டாக்டர் நவ சுப்ரமணியம், தொழில் துறை இணைப்பு இயக்குநர் பாலச்சந்திரன், அம்ருதா பல்கலைக்கழகத்தின் ஐ.க்யூ.ஏ.சி இணை இயக்கு நர் டாக்டர் பிரசாந்த் ஆர். நாயர் மற்றும் சி.எம்.ஏ செயலாளர் புனீத் கிருஷ்ணன் மற்றும் மேலாண்மை குழு உறுப்பினர்கள் முன்னிலை யில் பதிவாளர் டாக்டர் பி.அஜித் குமார் மற்றும் சி.எம்.ஏ தலைவர் டாக்டர் நித்யானந்தன் தேவராஜ் ஆகியோர் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்த முயற்சி, நிலையான தொழில் துறை கூட்டாண்மைகளை உருவாக்கும்.



