fbpx
Homeபிற செய்திகள்மத்திய அரசு திட்டங்களை முழுமையாக செயல்படுத்த முன்வராத தமிழக அரசு வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு

மத்திய அரசு திட்டங்களை முழுமையாக செயல்படுத்த முன்வராத தமிழக அரசு வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு

கோவை, வடவள்ளியில் நடைபெற்ற ‘மோடி முகாம்’ நிகழ்ச்சியில் பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கலந்து கொண்டு பயனாளிகள் மத்தியில் உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது:

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு நூற்றுக் கணக்கான நலத்திட்டங்களை தொடர்ந்து வழங்கி வருகிறது. குறிப்பாக அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான பல்வேறு திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஆனால், அந்த திட்டங்களை தமிழகத்தில் முழுமையாக செயல்படுத்த மாநில அரசு முன்வரவில்லை.

‘ஆயுஷ்மான் பாரத்’ திட்டத்தின் மூலம் ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு வழங்கப்படுகிறது. பிரதமர் அறிவிக்கும் திட்டங்கள் மக்களுக்கு நேரடியாக சென்றடைய வேண்டுமானால் மாநில அரசு ஒத்துழைக்க வேண்டும். ஏழை மக்களின் நலனில் தமிழக அரசு அக்கறை காட்டவில்லை.
விஸ்வகர்மா திட்டம் உள்ளிட்ட அமைப்பு சாரா தொழிலாளர் களுக்கான பல நலத் திட்டங்களை மாநில அரசு செயல்படுத்த முன்வரவில்லை. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் அமல்படுத்தப்பட்ட பல திட்டங்கள் தற்போது நிறுத்தப்பட்டு உள்ளன.

7 வயது முதல் 70 வயது வரை பெண்கள் மீதான குற்றச்செயல்கள் அதிகரித்து வருகிறது. சட்டம் ஒழுங்கு நிலைமை பாதிக்கப்பட்டு உள்ளது. இலவச பேருந்து திட்டம் முழுமையாக செயல்படவில்லை. மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள். மக்களுக்கு வழங்கப்படும் நிதியுதவிகள் மறுபுறம் டாஸ்மாக் மூலம் மீட்கப்படுகின்றன.

வர இருக்கும் தேர்தலில் அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலை மையில் ஆட்சி அமைக்க பாடுபட வேண்டும். தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களித்து தற்போதைய தி.மு.க அரசை மாற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக முகாமை பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் துவக்கி வைத்தார்.

படிக்க வேண்டும்

spot_img