fbpx
Homeபிற செய்திகள்கோவையில் திமுக கூட்டணி கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

கோவையில் திமுக கூட்டணி கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

திமுக மாவட்ட பொறுப்பாளர் துரை செந் தமிழ்ச் செல்வன் தலைமையில் கோவையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், கூட்டணி கட்சி தலைவர்கள் உள்ளிட்ட 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.


கோவை மாநகர் மாவட்ட திமுக சார்பில், கோவை டாடாபாத்தில், பாஜக – அதிமுக வை கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில், கோவை மாநகர் மாவட்ட திமுக பொறுப் பாளர் துரை செந்தமிழ்ச் செல்வன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, திமுக தீர்மானக்குழு செயலாளர் நா.கார்த்திக் (முன்னாள் எம்எல்ஏ), மாணவரணி செயலாளர் வழக்கறிஞர் ராஜீவ்காந்தி, மேயர் ரங்கநாயகி மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் முன்னிலை யில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத் தில், “நிதி இல்லை” 100 நாள் வேலை இல்லை” என ஒன்றிய பட்ஜெட் டில் தமிழகத்தை வஞ்சிக் கும் ஒன்றிய பாஜக அரசைக்கண்டித்தும், இதற்கு துணைபோகும் அதிமுகவை கண்டித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத் தில், திமுக மாவட்ட நிர்வாகிகள் கோட்டை அப்பாஸ், தளபதி இளங் கோ, திமுக தொழில் நுட்ப அணி டாக்டர் மகேந் திரன், கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மீனா ஜெயக்குமார், மற்றும் மாநகராட்சி மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், இந்திய தேசிய காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் விஜயகுமார், மதிமுக மாவட்ட செயலாளர் கணபதி செல்வராஜ், ஆர்ஆர்.மோகன்குமார், சிபிஎம் பத்மநாபன், சிபிஐ சிவசாமி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் பொதுச்செயலாளர் கு.இராமகிருஷ்ணன், ஆதி தமிழர் பேரவை அதியமான், ரவிக்குமார், திராவிடர் தமிழர் கட்சி வழக்கறிஞர் வெண்மணி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தனபால், ராதாகிருஷ்ணன், ரமேஷ், விடுதலை சிறுத்தைகள் கட்சி கோவை குரு, கோவை சம்பத், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சாகுல் அமீது, மக்கள் நீதி மய்யம் பிரபு, திராவிடர் இயக்க தமிழர் பேரவை காசு.நாகராஜ், தமிழக வாழ்வுரிமைக் கட்சி தங்கராசு பொன்னுசாமி, சந்திரசேகர், மனிதநேய ஜனநாயக கட்சி ஹனீபா, இந்திய தேசிய லீக் கிதர் முகமது, எஸ்டிபிஐ முஹம் மது இஷாக், தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர் கட்சி குருஸ் முத்து பிரின்ஸ், ஆதிதமிழர் பேரவை கோவை ராவணன், திரா விடர் கழகம் சந்திரசேகர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

நிறைவில் காந்திபுரம் பகுதி கழக செயலாளர் சேதுராமன் நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img