கோவையில் புற்றுநோயில் இருந்து மீண்டோர் சந்திப்பு நிகழ்ச்சி நீலாம்பூர் பகுதியில் உள்ள ராயல் கேர் மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.
புற்று நோய் குறித்த பயம் விலகி நம்பிக்கை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ராயல் கேர் புற்று நோய் சிகிச்சை ஆராய்ச்சி மையம் சார்பாக புற்று நோய் பாதிப்புகளில் இருந்து மீண்ட ஆயிரத்திற்கு மேற்பட்டோர் சந்திப்பு நிகழ்ச்சி ராயல் கேர் மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.

பல்வேறு பகுதிகளில் இருந்து குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர். இதில் பிரபல தன்னம்பிக்கை பேச்சாளர் ஈரோடு மகேஷ் கலந்து கொண்டு பேசினார். நாடகம், நடனம் போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மற்றும் தமிழ் புலமை சொற்பொழிவு என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
புற்று நோய் விழிப்புணர்வு நிகழ்வுகளில் புலவர் ராமலிங்கம் தலைமையில் கல்லூரி மாணவிகள் பங்குபெற்ற சமூக ஊடக மருத்துவம் – நேரடி மருத்துவர் ஆலோசனை ; எதை நம்பலாம்? என்கிற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது.
புற்று நோய் விழிப்புணர்வு என்கிற தலைப்பில் ஓவிய போட்டி மற்றும் கோலப்போட்டி (ரங்கோலி), நாடகம், நடனம் போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது.
பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ்களும் பரிசுகளும் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் மாதேஸ்வரன் வழங்கினார்.

முன்னதாக சர்வவைர்ஸ் மீட் அப் நிகழ்ச்சி குறித்து மருத்துவமனையின் தலைவர் டாக்டர் க மாதேஸ்வரன் மற்றும் புற்று நோய் சிகிச்சை மருத்துவ நிபுணர் சுதாகர் ஆகியோர் பேசுகையில், புற்று நோய் சிகிச்சையில் தற்போது குணமடைவோர் சதவீதம் நவீன தொழில் நுட்ப வசதிகள் மூலம் அதிகரித்து இருப்பதாக தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியில் புற்று நோய் சிகிச்சை மைய மருத்துவர்கள்,செவிலியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



