fbpx
Homeபிற செய்திகள்சர்வதேச வணிக சந்தையாக மாறிய பெப்ஃபீஸ்டா விழா

சர்வதேச வணிக சந்தையாக மாறிய பெப்ஃபீஸ்டா விழா

மேலாண்மை மாணவர்களின் தொழில் முனைவு ஆர்வத்தை தூண்டும் விதமாக பெப்ஃபீஸ்டா – 2026 என்ற விழா ஜி.ஆர்.ஜி ஸ்கூல் ஆஃப் மேனேஜ்மெண்ட் ஸ்டட்டிஸ்  சார்பாக  ‘குளோபல்பொட்பூரி’ என்ற கருப்பொருளை மையமாக கொண்டு நடைபெற்றது. 

இவ்விழாவை பி.எஸ்.ஜி.ஆர்  கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியின் செயலாளர் முனைவர் யசோதாதேவி  துவக்கி வைத்தார்.

ஜி.ஆர்.ஜி.எஸ்.எம்.எஸ் இயக்குநர் டாக்டர்பி. சதாசிவம்  ஒரு நாள் கண்காட்சியின் மூலம் ஒரே மேடையில் 20 நாடுகள் ஒன்றிணையும் உலகளாவிய தொழில்முனைவோர் ஆவலை வலியுறுத்தினார். 

இந்த கருப்பொருளின் அடிப்படையில் மேலாண்மை மாணவர்கள் இங்கிலாந்து, மெக்சிகோ, ரஷ்யா, ஜப்பான், துருக்கி, சீனா, அமெரிக்கா, வியட்நாம், இலங்கை, பெல்ஜியம், இந்தோனேஷியா, ஸ்பெயின், தாய்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம், இத்தாலி, ஜெர்மனி, கென்யா, தென்கொரியா, பிரான்ஸ் மற்றும் சிங்கப்பூர் ஆகிய 20 நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தினர்.

இதில் மாணவர்கள் அந்தந்த நாடுகளின் பண்பாட்டு பொருட்கள் மற்றும் பாரம்பரிய உணவுகளை காட்சிப்படுத்தி, வளாகத்தை ஒரு உலகளாவிய வணிக சந்தையாக மாற்றினர்.

படிக்க வேண்டும்

spot_img