டி.எச்.ஆர் – ஐ.சி.எம்.ஆர், புதுதில்லியின் நிதி யுதவியுடன், “செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திரக் கற்றல் மூலம் நரம்பியல் அறிவியலின் எதிர்காலம் அடுத்த தலைமுறை மென்பொருள் கருவிகள் மற்றும் ஒருங்கிணைந்த மருத்துவ ஆராய்ச்சி” என்ற தலைப்பில் நடைபெறும் இரு நாள் தேசியப் பயிலரங்கம், ஊட்டி ஜே.எஸ்.எஸ் மருந்தக கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது. இப்பயிலரங்கம் 6 மற்றும் 7 தேதிகளில் நடைபெற்றது.
மைசூருவில் உள்ள ஜே.எஸ்.எஸ் உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி அகாடமி (JSSAHER)யின் கீழ் செயல்படும் ஊட்டி ஜே.எஸ்.எஸ் மருந் தகக் கல்லூரி சார்பில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந் நிகழ்விற்கு புது தில்லி சுகா தார ஆராய்ச்சித் துறை ஐ.சி.எம்.ஆர் நிதியுதவி வழங்கியுள்ளது.
மருந்தக வேதியியல் துறை பேராசிரியர் மற்றும் தலைவர் டாக்டர் ஆர். காளிராஜன் வரவேற்புரை ஆற்றினார். அதனைத் தொடர்ந்து சிறப்பு விருந்தினர்கள் மங்கல விளக்கு ஏற்றி நிகழ்வைத் தொடங்கி வைத்தனர்.
மருந்தக வேதியியல் துறையின் ஏற்பாட்டுக் குழுச் செயலாளர் டாக்டர் கோமதி பயிலரங்கத்தின் நோக்கங்கள் குறித்து விளக்கி, நவீன மருந்து கண்டுபிடிப்பில் செயற்கை நுண்ணறிவு (AI), இயந்திரக் கற்றல் (ML) ஆகியவற்றின் மாற்றுத்திறன் மிக்க பங்கை வலியுறுத்தினார்.
ஜே.எஸ்.எஸ் மருந்தகக் கல்லூரி முதல்வர் டாக் டர் எஸ்.பி. தனபால் சிறப்புரையாற்றி, பல் துறை ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கத்தை மேம்படுத் துவதில் நிறுவனத்தின் உறுதிப்பாட்டை எடுத்து ரைத்தார். தலைமை விருந்தினராகக் கலந்து கொண்ட மைசூரு ஜே.எஸ்.எஸ் உயிரியல் அறிவியல் புலத் தின், உயிரித் தொழில் நுட்பம் மற்றும் உயிரித் தகவலியல் துறை இணைப் பேராசிரியர் டாக்டர் சஷாங்க கே.பிரசாத், உயிர்மருத்துவ மற்றும் மருத்துவ ஆராய்ச்சியில் கணக்கீட்டு கருவிகளை ஒருங்கிணைப்பதன் முக்கி யத்துவம் குறித்து தனது கருத்துகளைப் பகிர்ந்தார்.
சிறப்பு விருந்தினர்களில் ஒருவராகப் பங்கேற்ற புது தில்லி, டி.எஸ்.டி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையின் பிரிவுத் தலைவர் டாக்டர் தரம் வீர், மருந்தக அறிவியலில் ஆராய்ச்சி ஒத்துழைப்பு மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்தின் அவசியம் குறித்து உரையாற்றினார்.
அதன் பின்னர் நிபுணர் விரிவுரைகள், செய்முறைப் பயிற்சிகள் மற்றும் கலந்துரையாடல்களை உள்ளடக்கிய அறிவியல் அமர்வுகள் நடைபெற்றது.



