இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் வாழவந்தான்கோட்டை கிளை, அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் வசதி கருதி நேற்று முதல் புதிய வளாகத்தில் செயல்பட தொடங்கியது.
வங்கியின் புதிய வளாகத்தை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் திருச்சி மாவட்டத் தலைவர் எஸ்.பி.பாபு திறந்து வைத்தார்.
El Shaddai Engineering உரிமையாளர் பி.வில்சன், ஏடிஎம் மையத்தை திறந்து வைத்தார்.
முன்னதாக வாழவந்தான்கோட்டை ஐஓபி வங்கி கிளை மேலாளர் எல்.பி.விஜயலக்ஷ்மி அனைவரையும் வரவேற்றார்.
நிகழ்வில் வங்கியின் திருச்சி மண்டல பொது மேலாளர் ஜி.ஸ்ரீராம் பேசுகையில், இப்பகுதி மக்களுக்கு தேவைப்படும் அனைத்து வகையான வங்கி சேவைகளையும் ஐஓபி வாழவந்தான்கோட்டை கிளை வழங்குவதற்கு தயாராக உள்ளது என உறுதி அளித்தார்.
வங்கியின் புதிய வளாகம் திறப்பு விழாவை முன்னிட்டு பொதுமக்கள் மற்றும் விவசாய பெருமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு வகையான சேவைகளுடன் சுயஉதவிக் குழுக்களுக்கான கடன்கள் மற்றும் நகை கடன்கள் வழங்கப்பட்டன.
விழாவில் வாழவந்தான்கோட்டை பகுதியை சார்ந்த பொதுமக்கள், வாடிக்கையாளர்கள் பலர் பங்கேற்றனர்.



