கோவை கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் கடந்த 27ம் தேதி தமிழ்நாடு அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா கல்லூரி வளாகத்தில் உள்ள மாரப்ப கவுண்டர் ஆறுச்சாமி கலை யரங்கில் நடைபெற்றது.
இவ்விழாவில் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் கணபதி ப.ராஜ் குமார் தலை மையேற்று உரையாற்றினார்.
கல்லூரியின் செயலர் மற்றும் இயக்குநர் டாக்டர் சி.ஏ.வாசுகி மற் றும் தொண்டாமுத்தூர், அரசு கலை அறிவியல் கல்லூரி முதல்வரும் மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான முனைவர் ப.செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னதாக, கல்லூரி முதல்வர் முனைவர் வே.சங்கீதா வரவேற்புரை யாற்றினார். விழாவின் நிறைவில் துணை முதல்வர் முனைவர் எஸ்.நாகராஜா நன்றி நவின்றார்.
மாணாக்கரின் கல்வித் தரத்தை வளப் படுத்தும் நோக்கிலும் திறன் மேம்பாட்டை வளர்த்து ஆய்வுகளுக்குத் துணை செய்யும் வகையிலும் மூன்றாமாண்டு படிக்கும் 1411 மாணவ, மாணவிகளுக்குத் தமிழ்நாடு அரசின் விலையில்லா மடிக்கணினிகளை கோவை நாடாளுமன்ற உறுப்பினர் முனை வர் கணபதி ப.ராஜ்குமார் வழங்கினார்.



