கோவை காந்திபுரத்தில் உள்ள தமிழ்நாடு ஹோட்டலில் இந்திய சுற்றுலாவை மேம்படுத்த வெளிநாடு மற்றும் உள்நாட்டு பிரதிநிதிகள் சந்திப்பு மற்றும் சுற்றுலா அமைப்பிற்கு உறுப்பி னர்கள் சேர்க்கை நிகழ்ச்சி நடைபெற்றது.
உலகம் முழுவதும் சுற்றுலாத் துறை அதிவேக வளர்ச்சி அடைந்து வருகிறது. இதைக் கருத்தில் கொண்டு சுற்றுலாத் துறை வளர்ச்சிக்கு உதவிடும் வகையில் இந்த சந்திப்பு நிகழ்ச்சியை ஜூபிடர் டிராவல் எக்சிபிஷன் நிறுவனம் நடத்தி வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு, அந்தமான், கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம் மற்றும் கோவா போன்ற மாநிலங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளுடன் வியட்நாம், தாய்லாந்து, இங்கிலாந்து, சிங்கப்பூர், பூட்டான், பாலி, மலேசியா மற்றும் துபாய் உள்ளிட்ட சர்வதேச நாடுகளைச் சேர்ந்தவர்களும் இதில் பங்கேற்கின்றனர்.
முன்னதாக நடை பெற்ற விழாவில் சிறப்பு விருந்தி னராக இந்திய உள்நாட்டு சுற்றுலா ஆபரேட்டர்கள் சங்க தமிழ்நாடு பிரிவின் தலைவர் பி.அசோக் குமார் தேசிய மற்றும் மாநில விருது பெற்ற எஸ்.ராதா கிருஷ்ணன், மாநில விருது பெற்ற பஞ்சரவதனம் ராதாகிருஷ்ணன், இந்திய உள்நாட்டு சுற்றுலா ஆபரேட்டர் கள் சங்க தமிழ்நாடு பிரிவின் செயலாளர் லயன் என்.பாலு ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.



