fbpx
Homeபிற செய்திகள்நேதாஜி பிறந்தநாள் விழா

நேதாஜி பிறந்தநாள் விழா

அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் நிறுவன தலைவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு திருப்பூர் புதிய பேருந்து நிலையம் முன்பாக அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப் படத்திற்கு மத்திய குழு உறுப்பினரும் புதிதாக மாநில தலைவராக பொறுப்பேற்ற எஸ்.கர்ணன் தேவர் தலைமையில் அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

பின்னர் 500க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கு மகேஷ் குமார் தேவர் தலைமை தாங்கினார்.

இதில் நிர்வாகிகள் அன்பு ரமேஷ், ராமர், கறிக்கடை ரவி, நெல்லை சுறா பாண்டி, காளீஸ்வரன், பிரபாகரன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் திருப்பூர் முக்குலத்து சமுதாய தலைவர்கள் சீனிவாசன், எஸ்.பி.ராஜா, ராயல் லட்சுமணன், டி.ரமேஷ், முருகன், அய்யனார், காசிராஜன், கண்ணன், முத்துக்குமார், மாரிமுத்து, ஜெயபிரகாஷ், ஆனந்தன், ஐயப்பன், முருகன், தங்கதுரை, கே.வி.ஆர்.நகர் பிரகாஷ், கே.டி.சுரேஷ் தேவர் மற்றும் அகில இந்திய பார்வர்டு பிளாக் மகளிர் அணியினர் தமிழரசி, நந்தினி, சாந்தி, மீனா. ஈஸ்வரி, சாந்தி உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img