fbpx
Homeபிற செய்திகள்தேவமாதா செவிலியர் பயிற்சி பள்ளி பி.எஸ்.சி மாணவிகள் தீபம் ஏற்றும் விழா

தேவமாதா செவிலியர் பயிற்சி பள்ளி பி.எஸ்.சி மாணவிகள் தீபம் ஏற்றும் விழா

உதகை தேவமாதா செவிலியர் பயிற்சி பள்ளியில் டிப்ளமோ பயிற்சியானது 1998ம் ஆண்டு தொடங்கப்பட்டு 2025 வரை செவிலியர் பயிற்சி பள்ளியாக செயல்பட்டு வந்தது. தற்போது தமிழக அரசால் அனுமதி வழங்கப்பட்டு பிஎஸ்சி செவிலியர் கல்லூரியாக தரம் உயர்த் தப்பட்டு 2025&-2026ம் ஆண்டுகான மாணவியர் சேர்க்கை நடைபெற்றது.

தேவமாதா நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.எஸ்.சி நர்சிங் மாணவிகளின் தீபம் ஏற்றும் விழாவில் செவிலியர் உறுதிமொழி பிரமாணம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் அருட் சகோதரி ப்ரீத்தா மேரி வரவேற்றார். இந்த விழாவுக்கு நீலகிரி மறை மாவட்ட ஆயர் அமல்ராஜ், கோத்தகிரி ஜூட்ஸ் பள்ளி தாளாளர் தன்ராஜ் மற்றும் ஆசிசி திருசபையின் ப்ரொவின்சியல் அருட் சகோதரி ரிட்டி பிராசிஸ் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.


ஊட்டி மறை மாவட்ட ஆயர் அமல்ராஜ் பேசும்போது, ‘ஊட்டி மறை மாவட்டத்தில் உயர் கல்வி நிறுவனங்கள் உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் செயல்படுகிறது. குறிப்பாக தொழில் கல்வி நிறுவனங்கள் தேவை உள்ளது. அந்த வகையில் தற்போது செவிலியர் பயிற்சி கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது. இது மலை மாவட்டத்தில் மருத்துவ துறையில் பெரும் பங்காற்றும்’ என்றார்.

ஜூட்ஸ் பள்ளி தாளாளர் தன்ராஜ் பேசும் போது, ‘செவிலியர் தொழில் சேவை மனப்பான்மையுடன் செய்ய வேண்டும். அதை தேர்வு செய்துள்ள மாணவர்கள் போற்றுதலுக்குரியவர்கள். இந்த கல்லூரி பல்கலைக்கழகமாக உரு வாக வேண்டும்’ என்றார்.
பின்னர் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. வழக்கறிஞர் விஜய் பிரபு உட்பட பலர் கலந்து கொண்டனர்

படிக்க வேண்டும்

spot_img