fbpx
Homeபிற செய்திகள்பி.எஸ்.ஜி.ஆர் கிருஷ்ணம்மாள் கல்லூரி சார்பில் இரண்டு நாள் சர்வதேச மாநாடு

பி.எஸ்.ஜி.ஆர் கிருஷ்ணம்மாள் கல்லூரி சார்பில் இரண்டு நாள் சர்வதேச மாநாடு

கோவை பி.எஸ்.ஜி.ஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியின் முதுநிலை மற்றும் ஆராய்ச்சி வேதியியல் துறை சார்பில் 2026 ஜனவரி 8 மற்றும் 9 தேதிகளில், நிலையான தொழில்நுட்பங்களுக்கான மேம்பட்ட பொருட்கள் ஐ.சி.ஏ.எம்.எஸ்.டி 2026 என்ற தலைப்பில் இரு நாள் சர்வதேச மாநாடு நடைபெற்றது.
மாநாட்டின் தொடக்க விழாவில், கல்லூரி செயலர் யசோதாதேவி வரவேற்புரையாற்றினார். தொடர்ந்து, திருவாரூர் மத் திய தமிழ்நாடு பல்கலைக் கழகத்தின் வேதியியல் துறை பேராசிரியரும் தலை வருமான நாகராஜன் தொடக்க உரையாற்றி நிலையான மின்னணு தொழில்நுட்பங்களின் முக்கியத்துவத்தை விளக் கினார். இதனைத் தொடர்ந்து, மாநாட்டு நினைவுச்சுவடினை பேராசிரியர் நாகராஜன் வெளியிட்டார். கொரியா மேம்பட்ட அறிவியல் மற் றும் தொழில்நுட்பக்கழகம், கொரியா குடியரசின் இணைப்பேராசிரியர் டாக் டர் பாலமுருகன் ஜெய ராமன், திருச்சி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் பேராசிரியர் மணிவண் ணன், சி.எஸ்.ஐ.ஆர் தேசிய வேதியியல் ஆய் வகத்தின் விஞ்ஞானி டாக் டர் பானுமாரிமுத்து, ஜப்பானின் க்யூஷூ தொழில்நுட்ப நிறுவன இயக்குநர் பேராசிரியர் ஹிரோஃபுமிதனாகா, அமெரிக்காவின் மயாமி நகரில் உள்ள ஹெர்பர்ட் வெர்தைம் மருத்துவக்கல்லூரியின் உதவி பேராசிரியர் டாக்டர் ஆர்த்திவாஷித், மிமிஷிணிஸி திருவனந்தபுரத்தின் இணைப் பேராசிரியர் கோகுல்நாத், ஜப்பானின் க்யூஷூ தொழில்நுட்ப நிறு வனம், கிடாக்யூஷூவில் உள்ள ஆராய்ச்சி மையத்தை சேர்ந்த டாக்டர் க்ஷிதிஜ் ஆர்.பி. சிங் உள்ளிட்ட புகழ்பெற்ற ஆராய்ச்சியா ளர்கள் பங்கேற்றனர்.
இதன் வலையக அமர் வில் ஏ.ஆர்.சி.ஐ சென்னை அறிவியல் மையத்தலைவர் டாக்டர் ஆர்.பிரகாஷ், வேதியியல் துறை இணைப் பேராசிரியர் நளினி ஆகியோர் பேசினர். இந்த மாநாட்டில் மேம் பட்ட பொருட்கள், ஆற்றல் சேமிப்பு, நானோ மருத்து வம் மற்றும் செயற்கை நுண்ணறிவுடன் பொருள் அறிவியல் போன்ற தலைப் புகள் விவாதிக்கப்பட்டு, இந்தியா முழுவதிலுமிருந்து பங்கேற்ற சுமார் 250 பேர் பயனடைந்தனர்.
மாநாட்டின் இறுதியில் டாக்டர் அமுதா நன்றியுரை வழங்கினார்.

படிக்க வேண்டும்

spot_img