fbpx
Homeபிற செய்திகள்இந்துஸ்தான் கல்லூரியில் தொழில்நுட்ப போட்டிகள்

இந்துஸ்தான் கல்லூரியில் தொழில்நுட்ப போட்டிகள்

ஈங்கூர் இந்துஸ்தான் அறிவியல் மற்றும் வணிகக் கல்லூரியின் கணினி அறிவியல் துறை, டெக் வாலா 2K26 என்ற கல்லூரிகளுக்கு இடையேயான தொழில்நுட்பம் மற்றும் தொழில்நுட்பம் அல்லாத பல்வேறு போட்டிகளை ஏற்பாடு செய்தது.

கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த விழாவில் 24 கல்லூரிகளில் 614 மாணவர்கள் பல்வேறு போட்டிகளில் பங்கேற்றனர்.

தலைமை விருந்தினராக ஈங்கூரில் உள்ள இந்துஸ்தான் பொறியியல் கல்லூரியின் முதல்வர் டாக்டர் சி.ரமேஷ்குமார் பங்கேற்று விழாவிற்குத் தலைமை தாங்கினார்.

கல்லூரி அறக்கட்டளை நிர்வாகி டி.ஆர்.கே.சரஸ்வதி கண்ணையன் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.

ஒட்டுமொத்த கோப்பையை விஜயமங்கலத்தில் உள்ள சசூரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி வென்றது. கல்லூரி முதல்வர் ராமன் மற்றும் பேராசிரியர்கள் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img