நடுவீரப்பட்டு அருகே பொங் கல் பரிசு தொகுப்புக்கு கரும்பு கொள்முதல் செய்யும் பணியை கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில் குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடைகள் மூலமாக முழு கரும்புடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இதற்காக அதிகாரிகள் விவசாயிக ளின் விளைநிலங்களுக்கு நேரி டையாக சென்று கரும்பு கொள்முதல் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கடலூர் மாவட்டம், பத்திரக்கோட்டை பகுதியில் உள்ள கரும்பு தோட்டத்திற்கு நேற்று மாவட்ட கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் திடீரென சென்றார்.
அங்கு அவர்,விவசாயிகளிடம் இருந்து சரியான அளவு மற்றும் தரத்துடன் உள்ள கரும்புகளை கொள்முதல் செய்வது தொடர் பாக பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் கலெக்டர் கூறுகையில், தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை பொது மக்கள். அனைவரும் சிறப்பாக கொண்டாடிட வேண்டும் என்பதற்காக 1 கிலோ அரிசி,1 கிலோ சர்க்கரை, 1 முழு நீளக ரும்பு மற்றும் ரொக்கம் ரூ.3 ஆயிரம் வீதம் பொங்கல் சிறப்பு தொகுப்பு அனைத்து குடும்ப அட்டை தாரர்களுக்கு வழங்கிட தமிழ்நாடு முதல்-அமைச்சர் உத்தர விட்டுள்ளார்.
அதன்படி கடலூர் மாவட் டத்தில் 7,85,547 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும், 447 இலங்கை தமிழர் அட்டை தாரர்களுக்கும் என மொத்தம் 7,85,994 குடும்ப அட்டைதாரர் களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது.பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்கப்படவுள்ள கரும்பை அரசின் வழிகாட்டுதலின் படி இடைத்தரகர் கள் குறுக்கீடின்றி நேரடியாக கொள்முதல் செய்யப்ப டுவதையும், கொள்முதல் செய்யப்படும் கரும்பின் தரம் மற்றும் நீளம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் ஒரு கரும்புக்கு வெட்டுக்கூலி, போக்குவ ரத்து செலவினம், ஏற்றுக்கூலி, இறக்குக் கூலி மற்றும் கொள்முதல் விலை உள்ளிட்ட செலவினங்களை கருத்தில் கொண்டு நிர்ணயித்துள்ள அரசு தொகையான ரூ.38-ஐ கொள் முதல் செய்யப்படும் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்துதல் மற்றும் கரும்புகளை குடும்ப அட் டைதாரர்களுக்கு வழங்குதல் ஆகிய பணிகளை எவ்வித புகார்களுக்கும் இடமளிக்காமல் செயல்படுத்த துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.
அப்போது வேளாண்மை இணை இயக்குனர் லட்சுமிகாந்தன். கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் இளஞ்செல்வி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவி யாளர் (விவசாயம்) கதிரேசன், வேளாண்மைத்துறை அதிகாரிகள்,பொது விநி யோக திட்ட கூட்டுறவு சார்பதிவாளர்கள், வருவாய் துறை அலுவலர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.



