fbpx
Homeபிற செய்திகள்சாலைப் பணிகளை தொடங்கிவைத்த தருமபுரி எம்எல்ஏ வெங்கடேஷ்வரன்

சாலைப் பணிகளை தொடங்கிவைத்த தருமபுரி எம்எல்ஏ வெங்கடேஷ்வரன்

பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், தருமபுரி ஊராட்சி ஒன்றியம், இலக்கியம்பட்டி ஊராட்சி, இலக்கியம்பட்டி பரமசிவ கவுண்டர் தெரு மற்றும் காவேரி வாத்தியார் தெரு ஆகிய தெருக்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்ட நிதியில் ரூபாய் 7.50 இலட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை மற்றும் கழிவுநீர்கால்வாய் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டு, தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன் பூமி பூஜை செய்து, பணிகளை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சிகளில், பாமக மாநில தேர்தல் பணிக்குழு துணை தலைவர்
பெ.பெரியசாமி, ஒருங்கிணைந்த மாவட்ட அமைப்பு செயலாளர் இ.மா.பாலகிருஷ்ணன், மாவட்ட துணை தலைவர் தமிழரசன், முன்னாள் வார்டு உறுப்பினர் ரவி, திருஞானம், மனோகரன், முத்து, ஹரி, கிருஷ்ணன், பழனி, ஆண்டி, இளங்கோ, ராஜா, பெரியண்ணன், செந்தில் மற்றும் பொதுமக்கள் கலந்துக் கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img