fbpx
Homeபிற செய்திகள்கோவை மாவட்டத்தில் 'உலகம் உங்கள் கையில்' திட்டம்: 4320 கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி...

கோவை மாவட்டத்தில் ‘உலகம் உங்கள் கையில்’ திட்டம்: 4320 கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி விநியோகம்முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நெஞ்சார்ந்த நன்றி

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மைய வளாகத்தில் கல்லூரி மாணவர்களின் திறன் வளர்ச்சி மற்றும் டிஜிட்டல் முன்னேற்றத்திற்காக 10 இலட்சம் மடிக்கணினிகள் வழங்கும் “உலகம் உங்கள் கையில்” என்னும் மாபெரும் திட்டத்தை தொடங்கி வைத்ததையொட்டி, கோவை மாவட்டம் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா அரங்கத்தில் விழா நடைபெற்றது.

நிகழ்ச்சியில் 4320 கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் க.கிரியப்பனவர், கோவை நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் கணபதி ப.ராஜ்குமார் ஆகியோர் வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன், மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுருபிரபாகரன், துணை மேயர் ரா.வெற்றிச்செல்வன், மகளிர் திட்ட அலுவலர் மதுரா, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.கீதாஞ்சலி, மண்டல குழுதலைவர் மேற்கு மண்டலம் தெய்வயானை தமிழ்மறை, பணிகள் குழு தலைவர் சாந்தி முருகன், மாமன்ற உறுப்பினர் சங்கர், கல்லூரி முதல்வர்கள், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் நோடல் அலுவலர் முனனவர் கலையரசி, கல்லூரி மாணவ, மாணவியர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், ஆகியோர் கலந்துகொண்டனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாணவர்களின் நலன் மற்றும் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு தமிழ்ப்புதல்வன் திட்டம், புதுமைப் பெண் திட்டம், முதல் தலைமுறை பட்டமளிப்பு திட்டம், போஸ்ட் மெட்ரிக் உதவித்தொகைத் திட்டம், சமூக நீதி விடுதிகள் போன்ற பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றார்.

இத்திட்டங்களின் தொடர்ச்சியாக, மாணவர்கள் நவீன உலகின் தேவைகளுக்கு ஏற்ப டிஜிட்டல் திறன் பெற “உலகம் உங்கள் கையில்” என்னும் அறிவூட்டும் கருப்பொருளின் கீழ் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு 20 இலட்சம் மடிக்கணினிகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
அந்த அறிவிப்பின்படி, இத்திட்டம் மாநிலம் முழுவதும் இரண்டு கட்டங்களாக நிறைவேற்றப்படுகிறது. முதல் கட்டமாக 10 இலட்சம் மடிக்கணினிகள் வழங்கும் திட்டத்தின் தொடக்க விழா மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையிலும் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மைய வளாகத்தில் நடைபெற்றது.
ஒவ்வொரு மாணவருக்கும் உயர்தர மடிக்கணினி பையும் வழங்கப்பட்டுள்ளது. அரசு வழங்கும் விலையில்லா மடிக்கணினிகள், கல்வி வளர்ச்சிக்கு மட்டுமல்லாமல், வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கும், சமூகபொருளாதார முன்னேற்றத்திற்கும் நேரடி ஆதாரமாக உதவுகின்றன. டிஜிட்டல் திறன் மேம்பாடு மூலம் மாணவர்கள் தகவல் தொழில்நுட்பத் துறை, மென்பொருள் உருவாக்கம், தரவு உள்ளீடு, டிஜிட்டல் சந்தைப்படுத்தல், வரைகலை வடிவமைப்பு, குறியிடுதல், வலை வடிவமைப்பு, செயற்கை நுண்ணறிவு கருவிகள், சுயாதீன வேலை போன்ற துறைகளில் “புதிய வாய்ப்புகளைப் பெறும் புதிய தலைமுறை” என்ற அளவில் தகுதியானவர்களாக மாணவர்களை மாற்றிட உதவுகிறது.


இதனால் குடும்ப வருமானம் உயர்ந்து, கிராம &நகர இடைவெளி குறைந்து, தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட புதிய தொழில் முயற்சிகளும் உருவாகும் வாய்ப்பு அமையும். இத்திட்டம், “கல்வி மூலம் சமூக மேம்பாடு; தொழில்நுட்பம் மூலம் பொருளாதார முன்னேற்றம்” என்பதையும், “உலகம் உங்கள் கையில்” என்ற தமிழ்நாட்டின் மாபெரும் டிஜிட்டல் கனவையும் நனவாக்கும் வரலாற்றுப் பெருமைகள் சேர்க்கும் மாபெரும் கல்விப் புரட்சித் திட்டம் ஆகும்.

இதையொட்டி கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தை சேர்ந்த 74 மாணவர்கள், 187 மாணவிகள் என மொத்தம் 261 மாணவ மாணவியர்களுக்கும், தொண்டாமுத்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை சேர்ந்த 60 மாணவர்கள், 180 மாணவிகள் என மொத்தம் 240 மாணவ மாணவிகளுக்கும், ஆனைக்கட்டி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தை சேர்ந்த 61 மாணவர்கள், 15 மாணவிகள் என மொத் தம் 76 மாணவ மாணவிகளுக்கும், அரசு தொழில்நுட்ப கல்லூரியை சேர்ந்த 353 மாணவர்கள், 395 மாணவிகள் என மொத்தம் 748 மாணவ மாணவியர்களுக்கும், கோவை மருத்துவக்கல்லூரி – செவிலியர் பள்ளியை சேர்ந்த 89 மாணவிகளுக்கும், அரசு மருத்துவ கல்லூரியை சேர்ந்த 92 மாணவர்கள், 89 மாணவிகள் என மொத்தம் 181 மாணவ மாணவிகளுக்கும், அரசு பாலிடெக்னிக் கல்லூரியை சேர்ந்த 394 மாணவர்கள், 32 மாணவிகள் என மொத்தம் 426 மாணவ மாணவிகளுக்கும், பொள்ளாச்சி நாச்சி முத்து பாலிடெக்னிக் கல்லூரி சேர்ந்த 481 மாணவர்கள், 48 மாணவிகள் என மொத்தம் 529 மாணவ மாணவிகளுக்கும், சி.ஐ.டி சாண்ட்விட்ச் பாலிடெக்னிக் கல்லூரியை சேர்ந்த 171 மாணவர்கள், 18 மாணவிகள் என மொத்தம் 189 மாணவ மாணவிகளுக்கும், கோயம்புத்தூர் தொழில்நுட்ப கல்லூரியை சேர்ந்த 400 மாணவர்கள், 342 மாணவிகள் என மொத்தம் 742 மாணவ மாணவிகளுக்கும், ஸ்ரீ கிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியை சேர்ந்த 219 மாணவர்கள், 15 மாணவிகள் என மொத்தம் 234 மாணவ மாணவிகளுக்கும், பி.எஸ்.ஜி பாலிடெக்னிக் கல்லூரியை சேர்ந்த 503 மாணவர்கள், 102 மாணவிகள் என மொத்தம் 605 மாணவ மாணவியர்களுக்கும், ஆக மொத்தம் 12 கல்லூரிகளை சேர்ந்த 4320 மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் க.கிரியப்பனவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் கணபதி ப.ராஜ்குமார் ஆகியோர் வழங்கினார்கள்.
“உலகம் உங்கள் கையில்” என்னும் அறிவூட்டும் கருப்பொருளின் கீழ் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கும் திட்டத்தின் கீழ் பயனடைந்த செல்வன். முகம்மது ஆசிப் நிறைந்தது மனம் நிகழ்ச்சி வாயிலாக தெரிவித்ததாவது:

என் பெயர் முகம்மது ஆசிப். எனது சொந்த ஊர் தஞ்சாவூர். தற்போது கோவை மாவட்டத்திலுள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி. ஹானர்ஸ் அக்ரிகல்ச்சர் இறுதி ஆண்டு படித்துவருகிறேன். உலகம் செயற்கை நுண்ணறிவு எட்டியுள்ள இக்காலத்தில் நம் தமிழ்நாட்டு மாணவர்களின் தொழில்நுட்ப இடைவெளியினை குறைக்கவும், கற்றல் வளத்தினை மேம்படுத்தவும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தமிழ்நாடு முழுவதும் அமைந்துள்ள, கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மருத்துவக்கல்லூரி, தொழில்நுட்ப கல்லூரி உள்ளிட்ட உயர்கல்வி பயிலும் 10 இலட்சம் மாணக்கர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினரும் எங்களுக்கு விலையில்லா மடிக்கணினியினை வழங்கினார்கள்.
இந்த மடிக்கணினி எங்கள் கற்றல் திறனை மேம்படுத்தவும், ஆராய்ச்சி படிப்பிற்கு செல்வதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்படும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்புதல்வன், புதுமைப்பெண், நான் முதல்வன் உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்களை தந்துள்ளார்கள். மேலும், இந்த விலையில்லா மடிக்கணினி திட்டத்தைத் தந்த முதலமைச்சர் அவர்களுக்கு நிறைந்தது மனம் நிகழ்ச்சி வாயிலாக ஒட்டுமொத்த மாணவ சமுதாயம் சார்பில் நெஞ்சம் நிறைந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.
“உலகம் உங்கள் கையில்” என்னும் அறிவூட்டும் கருப்பொருளின் கீழ் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கும் திட்டத்தின் கீழ் பயனடைந்த செல்வி. ஹாரிணி நிறைந்தது மனம் நிகழ்ச்சி வாயிலாக தெரிவித்ததாவது:

என் பெயர் ஹாரணி. எனது சொந்த ஊர் தென்காசி. தற்போது கோவை மாவட்டத்திலுள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி. ஹானர்ஸ் அக்ரிகல்ச்சர் இறுதி ஆண்டு படித்துவருகிறேன். நவீன டிஜிட்டல் உலகத்தில் உயர்கல்வி பயிலும் அனைவருக்கும் மடிக்கணினி என்பது அவசியமான ஒன்றாக உள்ளது. ஆனால் கல்லூரியில் பயிலும் எல்லாராலும் மடிக்கணினி வாங்கமுடியாது. இந்நிலையில் முதலமைச்சர் அவர்களால் இன்று தமிழ்நாடு முழுவதும் அமைந்துள்ள, கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மருத்துவக்கல்லூரி, தொழில்நுட்ப கல்லூரி உள்ளிட்ட உயர்கல்வி பயிலும் 10 இலட்சம் மாணக்கர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார்கள்.
அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எங்களுக்கு விலையில்லா மடிக்கணினியினை வழங்கினார்கள். இந்த மடிக்கணினி கல்லூரி மாணவர்களான எங்கள் கற்றல் திறனை மேம்படுத்தவும், இன்டர்ன்சிப் பெறுவதற்கும், ஆராய்ச்சி, வேலைவாய்ப்பு என அனைத்து வகையிலும் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இத்திட்டத்தை தந்த முதலமைச்சர் அவர்களுக்கு நிறைந்தது மனம் நிகழ்ச்சி வாயிலாக எங்கள் கல்லூரி மாணவ மாணவியர்கள் சார்பாக நெஞ்சம் நிறைந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தொகுப்பு:
ஏ.செந்தில் அண்ணா,
-செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,
கோவை மாவட்டம்.

படிக்க வேண்டும்

spot_img