fbpx
Homeபிற செய்திகள்கேம்ஃபோர்டு சர்வதேச பள்ளி சார்பில் பறவைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு மாரத்தான்

கேம்ஃபோர்டு சர்வதேச பள்ளி சார்பில் பறவைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு மாரத்தான்

பறவைகள் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, உடல் தகுதி மற்றும் சமூக பங்கேற்பை ஊக்குவிக்கும் நோக்கத்துடன், தேசிய பறவை தினத்தை முன்னிட்டு கோயம்புத் தூரில் உள்ள கேம்ஃபோர்டு சர்வதேச பள்ளியில் கேம்ஃபோர்டு விங்கத்தான் என்ற மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. இந்த நிகழ்வு தலைவர் அருள் ரமேஷ், தாளாளர் பூங்கோதை அருள் ரமேஷ் மற்றும் முதல்வர் பூனம் சாயல் ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் நடைபெற்றது.

இந்த மாரத்தான் போட்டியை SACON (சலீம் அலி பறவையியல் மற்றும் இயற்கை வரலாற்று மையம்) இயற்கை கல்வியின் மூத்த முதன்மை விஞ்ஞானி டாக்டர் பி.பிர மோத் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.


அவர் பறவை பல்லுயிர் பெருக்கத்தைப் பாதுகாப்பதன் முக்கியத் துவத்தையும் மாணவர் களிடையே சுற்றுச்சூழல் பொறுப்பை வளர்ப்பதன் முக்கி யத்துவத்தையும் வலியுறுத்தினார்.

கேம்ஃபோர்டு சர்வதேச பள்ளி வளாகத்தில் தொடங்கிய ஓட்டம் 1.5 கிமீ, 3 கிமீ மற்றும் 5 கிமீ என நடந்தது. இது உற்சாகம், உடற்பயிற்சி மற்றும் ஒற்றுமையின் துடிப்பான சூழலை உருவாக்கியது.
பரிசு வழங்கும் விழாவில் கோவை வருமான வரித்துறையின் உதவி ஆணையர் மாணிக்கராஜ் கலந்து கொண்டு வெற்றியாளர்களுக்கு கோப்பைகளையும் பதக்கங்களையும் வழங்கினார். அனைத்து பங்கேற் பாளர்களும் பதக்கங்களையும் சான்றி தழ்களையும் பெற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img