fbpx
Homeபிற செய்திகள்தூத்துக்குடி ராஜாஜி பூங்காவில் புத்தாண்டு கொண்டாட்டம்

தூத்துக்குடி ராஜாஜி பூங்காவில் புத்தாண்டு கொண்டாட்டம்

தூத்துக்குடி ராஜாஜி பூங்கா நடைப்பயிற்சி நண்பர்கள் சார்பில் 2026 புத்தாண்டு தினத்தை முன்னிட்டு பூங்காவில் கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ராஜாஜி பூங்கா துப்புரவு பணியாளர்களுக்கு இலவச வேட்டி சேலை வழங்கப்பட்டது.

இவ்விழாவில் சமத்துவ மக்கள் கழகம் சார்பில் மாவட்ட செயலாளர் மாலை சூடி அற்புதராஜ், மாநில கலை இலக்கிய அணி செயலாளர் வக்கீல் அந் தோணி, பிச்சை மாவட்ட அவைத்தலைவர் கண்டிவேல், மாவட்ட பொருளாளர் லயன் பழனி வேல், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் சிவசு முத்துக் குமார், தொழிலதிபர்கள் ரத்னா தர்மராஜ், பூக்கடை செல்வராஜ், நடராஜன், சுப்பையா, ஆறுமுகம், பாலசுப்பிரமணியம் ,முருகேசன், ஜான், வழக்கறிஞர்கள் செல்வக்குமார், வேல்முருகன், மாஸ்டர் தங்கராஜ், எல் ஐ சி முகவர்கள் கணேசன், கந்தசாமி, ஜெயக்குமார், ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் பால் ராஜ், ராமர், விக்னேஷ் ,சேகர், சங்கர் உள்பட நூற்றுக்கும் மேற் பட்டோர் கலந்து கொண்டனர்.

இதேபோல தூத்துக்குடி, தாளமுத்து நகர் இலங்கை தமிழர் முகாமில் நெய்தல் எழுத்தாளர்கள் வாசகர்கள் இயக்கம் சார்பில் புத்தாண்டு விழா நடைபெற்றது. இம்மு காமில் வாழக்கூடிய வயது முதிர்ந்த முப்பது முதியோர் குடும்பங்களுக்கு நெய்தல் எழுத் தாளர் வாசகர் இயக்கத்தின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வுக்குப் புனித பிரான்சிஸ் சவேரியார் மேனி லைப் பள்ளியின் தாளாளர் அருள்முனைவர் பிரான்சிஸ் சேவியர் சே.ச. தலைமை வகித்தார். புனித பிரான்சிஸ் சவேரியார் மேனிலைப் பள்ளியின் முன்னாள் மாண வர் நிஷாந்த், நெய்தல் எழுத்தாளர் கள் இயக்கத்தின் ஜிபின் ஜார்ஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தூத்துக்குடி புனித பிரான்சிஸ் சவேரியார் மேனி லைப்பள்ளி முன்னாள் மாணவர் இயக்கத்தின் இணைச் செயலரும், நெய்தல் எழுத்தாளர்கள் வாசகர்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளருமான எழுத்தாளர் தமிழ்ச் செம்மல் நெய்தல் யூ.அண்டோ சிறப்புரையாற்றினார்.

அருள் முனைவர் பிரான்சிஸ் சேவியர் சே.ச.ஆசியுரை வழங்கி நலத்திட்ட உதவிகளை வழங்கினார். முகாம் மக்கள் சார்பாக ஸ்டெல்லா நன்றியுரை கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img