சத்ய மங்கலம் பெண்கள் கிளப் தமிழ்நாடு வனத்துறை, ஈரோடு கேன்சர் சென்டர் மற்றும் ரீடு நிறுவனம் இணைந்து கெத்தேசால் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ரீடு நிறுவனத்தின் இயக்குனர் இரா.கருப்புசாமி தலைமையில் மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
இம்முகாமில் மக்களுக்கு ஏற்படும் மார்பாக புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய், தோல் கல்லீரல்,இரைப்பை, சிறுநீரகம்,தைராய்டு, மலக்குடல் புற்றுநோய் மற்றும் பொது மருத்துவம் ஆகியவை பரிசோதனை செய்யப்பட்டு ஆலோசனை வழங்கப்பட்டது. இம்முகாமில் 2 நபர்களுக்கு புற்றுநோய் கண்டறியப்பட்டு மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது. இம்முகாமில் 69 பேர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.இம்முகாமினை ரீடு நிறுவனத்தின் திட்ட மேலாளர் வி.பழனிசாமி, திட்ட அலுவலர்கள் மற்றும் சமூக கல்வியாளர்கள் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்



