கோவை நவஇந்தியா ராமகிருஷ்ண கல்லூரி மைதானத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திமுக கோவை மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் லாரா பிரேம்தேவ் ஏற்பாட்டில் கோவை மாவட்ட திமுக இளைஞரணி மற்றும் ஏ.ஆர் வாலிபால் கிளப் இணைந்து நடத்தும் கைப்பந்து விளையாட்டுப் போட்டியை திமுக மாநகர மாவட்ட பொறுப்பாளர் துரை செந்தமிழ்ச்செல்வன் துவக்கி வைத்தார்.
உடன் மாவட்டத் துணைச் செயலாளர் கோட்டை அப்பாஸ், கலை இலக்கியப் பகுத்தறிவு மாநில துணை செயலாளர் மீனா ஜெயக்குமார், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் அண்ணம்மாள் ராஜா, முன்னாள் நெசவாளர் அணி துணை செயலாளர் சஞ்சீவி நாதன், அமைப்பாளர் தனபால், மணிகண்டன்,பகுதி கழக செயலாளர்கள் மோகன் ராஜ், நாகராஜ் வட்ட செயலாளர்கள் சசிக்குமார், ஜெபமாலை தாஸ் கலந்து கொண்டனர்.



