கோவை கொடிசியா மைதானத்தில் கிறிஸ்துமஸ் மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு Evergreen Entertainment சார்பில் Wonder Falls பொருட்காட்சி துவங்கப்பட்டது.
இதனை திமுக இளைஞர் அணி மாநில செயலாளர் ராஜிவ்காந்தி, திமுக மாநகர் மாவட்ட செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் திறந்து வைத்தனர்.

இந்த கண்காட்சியானது பிப்ரவரி ஒன்றாம் தேதி வரை நடத்தப்பட உள்ளது.
நாள்தோறும் மதியம் 2 மணி முதல் இரவு 10 மணி வரை நடத்தப்படும். கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் விடுமுறையை முன்னிட்டு பொதுமக்கள் உற்சாகமாக விடுமுறையை கழிக்கும் வண்ணம் இந்த பொருட்காட்சி துவங்கப்பட்டுள்ளது.
இந்த பொருட்காட்சியில் பிரம்மாண்டமான நீர்வீழ்ச்சி உட்பட ஏராளமாக விளையாட்டுகள், பொழுதுபோக்கு அம்சங்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.



