கோவை வ உ சி மைதானத்தில் தொடர் விடுமுறையை முன்னிட்டு கோவை மக்கள் பொழுதுபோக்கிற்காக 5 இன் 1 பிரம்மாண்டமான பொருட்காட்சியை கோவை மாநகர் மாவட்ட செயலாளர் துரை செந்தமிழ் செல்வன் திறந்து வைத்து பார்வையிட்டார்.

5 இன் 1 பொருட்காட்சியில் ஜுராபிக் பார்க்,அவதார், பூக்கள் கண்காட்சி, ஸ்நோ வேல்டு,3-ஞி லைட்டிங் உள்ளிட்டவை பொதுமக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இதில் பெரியவர்களுக்கு 100 ரூபாய் நுழைவு கட்டணமும், சிறியோர்களுக்கு 80 ரூபாய் நுழைவு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் ராட்டினங்கள் உள்ளிட்ட குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து விளையாட்டு அம்சங்களும் உள்ளது.

இந்த திறப்பு விழா நிகழ்ச்சியில் வார்டு செயலாளர் விஜயகுமார், மீன் அப்பாஸ், மாவட்ட பிரதிநிதி சுஜித், L.N Raheem, தங்கவேல் (THGOA )Tmmk செயலாளர் முஜிபுர் ரகுமான், TMS அப்பாஸ் K.u அபுதாகீர், அப்துல் கஃபூர், செந்தில் குமார், முஹம்மது ரபி , ராதா, உபைபது ரஹ்மான், சந்திரசேகர், இஸ்மாயில், ஜியா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.



