தமிழ்நாடு மேற்கு மண்டலத்திலிருந்து சுமார் 120 பள்ளிகளைச் சேர்ந்த 7,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்ற 46-வது கோயம்புத்தூர் சகோதயா பள்ளிகளுக்கு இடையேயான மாநில அளவிலான மூன்று நாட்கள் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகள் அம்ருதா விஸ்வ வித்யாபீடத்தில் பாராட்டு விழாவுடன் நிறைவு பெற்றது.
பாலக்காடு மாவட்ட காவல் துறை ஆணையர் அஜித் குமார் பாராட்டு விழாவில் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங் களையும், கேடயங்களையும் வழங்கினார்.
அவர் போட்டியாளர்களை வாழ்த்தியதுடன், மாணவர்களை கல்வியுடன் விளையாட்டுகளையும் தொடர ஊக்குவித்தார். போட்டி யில் ஆண்கள் மற்றும்
பெண்கள் பிரிவுகளில் பிருந்தாவன் வித்யாலய பப்ளிக் பள்ளி முதல் இடத்தைப் பிடித்தது. எஸ்.எஸ்.வி.எம் மேட் டுப்பாளையம் இரண்டாவது இடத்தையும், எஸ்.எஸ்.வி.எம் குளோபல் ஸ்கூல் மூன்றாவது இடத்தையும் வகித்தன.
பிரிவு வாரியாக, எஸ்.எஸ்.வி.எம் மேட்டுப்பாளையம் மொத்த ஆண்கள் வாகையாளராக வெற்றி பெற்றது. மொத்த பெண்கள் வாகையாளர் பட்டத்தை பிருந் தாவன் வித்யாலய பப்ளிக் பள்ளி வென்றது.
இந்த பாராட்டு விழாவில் அம்ருதா விஸ்வ வித்யா பீடத்தின் பதிவாளர் டாக்டர் அஜித்குமார், வளாக இயக்குநர் ஏர் காம்டோர் சதீஷ் மேனன் (ஓய்வு), மனநல மருத்துவத்துறை இயக்குநரகத்தைச் சேர்ந்த டாக்டர் ஷௌரி குட்டப்பா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
கோயம்புத்தூர் சகோதயா பள்ளிகளிலிருந்து நிகழ்வில் கலந்து கொண்ட அலுவலர்களில் தலைவர் டாக்டர் நவமணி, துணைத் தலைவர் ஞான பாண்டித்தன், செயலாளர் ஆரசு பெரியசாமி, இணைச் செயலாளர் சாம்சன் செல்லதுரை, கூட்டு செயலாளர்கள் வித்யா ஷங்கர் மற்றும் டாக்டர் அபிஷேக் பவுல் ஜாக்சன், பொருளாளர் லில்லி பிரின்ஸி ஆகியோர் அடங்குவர்.
குழு உறுப்பினர்களான கருணாம்பிகேஸ்வரி, பிரேமா, சாலின் மற்றும் மாதிஸெல்வியும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.



