கோவை ராம்நகரில் செயல்பட்டு வரும் கோவை நீரிழிவு நோய் சிறப்பு மையம் மற்றும் மருத்துவமனையின் சர்க்கரை நோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் பால முருகனுக்கு இந்திய மருத்துவ சங்க தமிழ்நாடு மாநில விருது, காரைக்குடியில் நடைபெற்ற டிமாகான் விழாவில் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந்த விருதை இந்திய மருத்துவ சங்கத்தின் மாநில கிளை தலைவர் டாக்டர். செங்குட்டுவன் மற்றும் செயலாளர் டாக்டர். கார்த்திக் பிரபு ஆகியோர் வழங்கினார்கள்.
கோவை நீரிழிவு நோய் சிறப்பு மையம் மற்றும் மருத்துவமனையின் சர்க்கரை நோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் பாலமுருகன் 1000-க்கும் மேற்பட்ட சர்க்கரை நோய் விழிப்புணர்வு மருத்துவ முகாம்களை நடத்தியுள்ளார்.
சமீபத்தில் சர்க்கரை நோய் குறித்த ஆய்வுக் கருத்தரங்கம் நடைபெற்றது.
இந்தக் கருத்தங்கில் பங்கேற்று, தனது தற் போதைய நவீன சர்க்கரை நோய் சிகிச்சை முறை குறித்த ஆய்வுக் கட்டுரையை சமர்ப்பித்தார்.
மேலும் இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோல்டன் டாக்டர் என்ற விருதும் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.



