சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கும் கல்வி தொழில் நுட்ப நிறுவனமான ‘க்ரு’ சார்பில் கோவை சரவணம்பட்டியில் உள்ள குமரகுரு பொறியியல் கல்லூரி வளாகத்தில் உயர் நிலை பள்ளி மாணவர்களுக்கான 2 நாள் ‘மாணவர் மாநாடு’ நடைபெற்றது.
ஆக்ஸ்போர்ட், ஐ.ஐ.டி. போன்ற பெருமைக்குரிய உயர்கல்வி நிறுவனங்களை சேர்ந்த நிபுணர்கள் உத வியுடன், இந்த ‘க்ரு’ நிறுவனமானது இது வரை 470,000-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வழக்கமான வழியில் அல்லாமல் திட்டங்கள்/விளக்க மாதிரிகள் மூலமாக கற்றல் அனுபவத்தை வழங்கும் வழக்கத்தை கொண்ட ஒரு நிறுவனம் ஆகும்.
இந்நிலையில் கோவை சரவணம்பட்டியில் உள்ள குமரகுரு பொறியியல் கல்லூரி வளாகத்தில் உயர் நிலை பள்ளி மாணவர்களுக்கான 2 நாள் ‘மாணவர் மாநாடு’ நடைபெற்றது.
இந்த 2 நாள் நிகழ்வு “படைப்பாக்க ஆய்வகம்“ (Creation Lab) என்று அழைக்கப்பட்டது. இதில் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (STEM) போன்ற துறைகள் சார்ந்த தலைப்பு களுக்கு 40-க்கும் மேற்பட்ட தீர்வுகள் உருவாக்கப்பட்டு அவை இந்த நிகழ்வில் காட்சிப்படுத்தப்பட்டன.
இந்த தீர்வுகள் எல்லாமே மாணவர்களால் உருவாக்கப்பட்ட ஆரம்பக் கட்ட மாதிரிகள், செயல் விளக்கங்கள், நிறுவல்கள் மற்றும் யோசனை முன் மாதிரிகள் ஆகும்.
இந்தியா மற்றும் சில தேர்ந்தெடுக்கப்பட்ட சர்வதேச நாடுகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட திறமையான உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் இந்தக் கருத்துகளை வடி வமைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்ச்சியில், கல்வியாளர்களும் நிபுணர்களுமான அனில் ஸ்ரீனிவாசன் (க்ரு மற்றும் ராப்சோடி நிறுவனங்களின் நிறுவனர்), தேவ்தத் பட்நாயக் (எழுத்தாளர் & புராணவியலாளர்), அனிதா ரத்னம் (பாரம்பரிய நடனக் கலைஞர் & தொழில்முனைவோர்), விவேக் சுந்தர் (கேரளா ஆயுர்வேதா லிமிடெட்டின் தலைமை செயல் அதிகாரி, முன்னாள் சிஓஓ, ஸ்விக்கி), மற்றும் ஸ்ரீ இராமசுப்ரமணியம் (சிரா குஸ் பல்கலைக்கழகப் பேராசிரியர்), ஆகியோருடன் பல உலகளாவிய படைப்பாளர் கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் கல்வித் தலைவர்களும் மாணவர்கள் முன் சிறப்புரையாற்றினர்.
இந்த மாநாட்டில் பங்கேற்க 500 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தாலும், போட்டித்தன்மை கொண்ட 200 மாணவர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
“புதிய கண்டுபிடிப்புகளின் தரம், குறிப்பாகத் தொழில்நுட்பச் சாத்தியக் கூறு மற்றும் மனிதனை மையப்படுத்திய வடிவமைப்பு ஆகியவற்றின் தடையற்ற ஒருங்கிணைப்பு வியக்கத்தக்கதாக இருந்தது,” என்று க்ரு நிறுவனத்தின் இயக்குனர் ராகுல் ராமச்சந்திரன் கூறினார்.



