உதகை கிரசென்ட் கேசில் பப்ளிக் பள்ளியில் நீலகிரி மாவட்டத்தின் முதல் செயற்கை நுண்ணறிவு ஆய்வகம் திறக்கப்பட்டுள்ளது.
ஊட்டி,- குன்னூர் சாலையில் கிரசென்ட் கேசில் பப்ளிக் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 1 முதல் 12ம் வகுப்பு வரை சிறந்த ஆசிரியர்களை கொண்டு பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது.
இப்பள்ளியில் நீலகி ரியின் முதல் செயற்கை நுண்ணறிவு ஆய்வகம் மற்றும் மாபெரும் அறிவியல் கண்காட்சி நேற்று நடந்தது.
பள்ளி தாளாளர் பாரூக் தலைமை வகித்தார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியர் அபிலாஷா கௌர் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பார்வையிட்டார்.

இக்கண்காட்சியில் 1 முதல் 11ம் வகுப்பு வரை மாணவர்கள் பல்வேறு அறிவியல் கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தி அசத்தினர்.
இக்கண்காட்சி இன்றும் நடக்கிறது. சிறந்த கண்காட்சி தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.
அறிவியல் கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தி இருந்த அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளது.



