fbpx
Homeபிற செய்திகள்எம்ஜிஎம் ஹெல்த்கேர் தீவிர சிகிச்சைப் பிரிவு தரத்தில் ஆம்புலன்ஸ் சேவை அறிமுகம்

எம்ஜிஎம் ஹெல்த்கேர் தீவிர சிகிச்சைப் பிரிவு தரத்தில் ஆம்புலன்ஸ் சேவை அறிமுகம்

நகரின் முன்னணி பன்னோக்கு மருத்துவமனையான எம்ஜிஎம் ஹெல்த்கேர், தனது அதி நவீன ‘மொபைல் எக்மோ யூனிட்’ சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.

இது இதயம் அல்லது நுரையீரலில் தீவிர செயலிழப்பு ஏற்பட்ட நோயாளிகளுக்கு ஐசியு தரத்திலான உயிர் காக்கும் ஆதரவையும், சம்பவ இடத்திலேயே உடனடி நிலைப்படுத்தலையும் வழங்கும்.

மருத்துவமனைக்கு அழைத்து வந்த பிறகு, உயிர் காக்கும் சிகிச்சையைத் தொடங்குவதில் ஏற்படும் தாமதத்தை குறைப்பதால் நோயாளிகள் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பு இது கணிசமாக மேம்படும்.

இந்த நடமாடும் மருத்துவ வாகனத்தை, அண்ணா நகர் உதவி காவல் ஆணையர் ரவி, அண்ணாநகர் சட்ட மன்ற உறுப்பினர் எம்.கே. மோகன், மற்றும் அலர்ட் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் டாக்டர் ராஜேஷ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இந்நிகழ்வில் எம்ஜிஎம் ஹெல்த்கேரின் இதயம் மற்றும் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சைத் துறை இயக்குனர் டாக்டர் கே. ஆர்.பாலகிருஷ்ணன், இதயம் மற்றும் நுரையீரல் மாற்று சிகிச்சை பிரிவின் இணை இயக்குனர் டாக்டர் சுரேஷ் ராவ், மற்றும் மயக்கவியல் மற்றும் அறுவை சிகிச்சை சார்ந்த தீவிர சிகிச்சைப் பிரிவின் முதுநிலை ஆலோசகர், கிளினிக்கல் டைரக்டர் டாக்டர் சேனாதி நந்த கிஷோர் ஆகியோர் இந்நிகழ்வில் முன்னிலை வகித்தனர்.

எக்ஸ்ட்ராகார்போரல் மெம்பிரேன் ஆக்சிஜனேஷன் (ECMO) என்பது ஒரு உயிர் காக்கும் தொழில் நுட்பமாகும். மாரடைப்பு, இரத்தத்தை பிற உறுப் புகளுக்கு இதயத்தால் அனுப்ப இயலாத நிலை, தீவிர மாரடைப்பு, நுரையீரல் ரத்த உறைவு, முற்றிய நிமோனியா, ஏஆர்டிஎஸ் (ARDS) மற்றும் கட்டுப்படுத்த இயலாத சுவாச செயலிழப்பு போன்ற உயிருக்கு ஆபத்தான நிலைகளில் எக்மோ மிக முக்கிய பங்காற்றுகிறது.

இது குறித்து டாக்டர் சேனாதி நந்த கிஷோர் பேசுகையில், “புதிய ‘மொபைல் எக்மோ யூனிட்’ மேம்பட்ட இதய- நுரையீரல் சிகிச்சை ஆதரவை நோயாளி இருக்கும் இடத்திற்கே கொண்டு செல்கிறது.

இந்த ஆம்புலன்ஸ் யூனிட்டில் உள்ள நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவர்கள், இரத்தமாற்று நிபுணர்கள் மற்றும் செவிலியர்கள், மருத்துவமனைக்குச் செல்வதற்கு முன்னரே சம்பவ இடத்திலேயே விரைவாக நோயாளியை நிலைப்படுத்தி உயிர் காக் கும் சிகிச்சையை உடனடியாகத் தொடங்குகின்றனர்,” என்று கூறினார்.

டாக்டர் கே.ஆர். பாலகிருஷ்ணன் பேசுகையில், “பாரம்பரியமான அனைத்து உயிர் மீட்பு முயற்சிகளும் பலனளிக்காத நிலையில், எக்மோ மட் டுமே உயிரைக் காக்கும் ஒரே வழியாக உள்ளது” என்றார்.

இது குறித்து டாக்டர் சுரேஷ் ராவ் கூறுகையில், “இந்த நடமாடும் எக்மோ பிரிவு அவசர சிகிச்சைப் பிரிவில் ஒரு மாபெரும் முன்னேற்றமாகும்“ என்றார்.

படிக்க வேண்டும்

spot_img