fbpx
Homeபிற செய்திகள்கரூரில் பள்ளி மாணாக்கர்கள் நடத்திய விழிப்புணர்வு பேரணி

கரூரில் பள்ளி மாணாக்கர்கள் நடத்திய விழிப்புணர்வு பேரணி

கரூர், ஈரோடு சாலையில் செயல்படும் பப்ளிக் ஸ்கூல் பள்ளி சார்பாக தேசிய மாசுக் கட்டுப்பாடு தினத்தை முன்னிட்டு பள்ளி மாணாக்கர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 80 அடி சாலையில் துவங்கி நடைபெற்றது.

இந்த பேரணியை பள்ளியின் முதல்வர் பிரியதர்ஷினி, கரூர் நகர காவல் உதவி ஆய்வாளர் நாகராஜ் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

இந்த பேரணி கரூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள நகரின் முக்கிய சாலைகள் மற்றும் வீதிகள் வழியாக, மாசு கட்டுப்பாடு குறித்தும், மாசு ஏற்படாமல் தவிர்ப்பது குறித்தும் பல்வேறு வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியவாறு பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்திச் சென்றனர்.

இந்த நிகழ்ச்சியில் பள்ளி நிர்வாகி ஆறுமுகம், பள்ளியின் ஆசிரியர்கள், ஆசிரியைகள் கலந்து கொண்டு பேரணியை சிறப்பித்தனர்.

படிக்க வேண்டும்

spot_img